திருச்சி கிழக்குத் தொகுதியில் போட்டியா? மு.க.ஸ்டாலின் பதில்

0 12
Stalin trichy visit

தி.மு.க. தலைவர் மு.கூஸ்டாலின் திருச்சி கிழக்குத் தொகுதியில்  போட்டியிடு வாரா? என்ற கேள்விக்கு அவர் பதில் அளித்து உள்ளார்.

தி.மு.க. தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் கொளத் தூர் தொகுதியில் போட்டியிட்டார். ஆனால், தமிழகம் முழுவதும் ஓங்கி ஒலித்த விசில் சத் தத்தில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட மு.க.ஸ்டாலினும் தோல்வியை தழுவினார். முதலமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலின் தோல்வி அடைந்தது தி.மு.க.நிர்வாகிக ளுக்கும், தொண்டர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை அளித் தது.

மு.க.ஸ்டாலின், தான் தோல்வி அடைந்த போதி லும் தனக்கு வாக்களித்த கொளத்தூர் தொகுதி மக்க ளுக்கு நன்றி தெரிவிக்க சென்கிறார். அப்போது, உடன் சென்ற முன்னாள் அமைச்சர் பி.கே.சேகர்பாபு கண்ணீர் விட்டு அழுதது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

இப்படி தங்கள் தலைவர் தோற்றுவிட்டாரே என்று தி.மு.க.வினர் பெரும் மன வேதனையில் இருந்து வரும் சூழலில், தமிழக சட்டமன்றத் தில் கவர்னர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் மற்றும் விவாதத்தின் பேசிய நிறைவாக முதல்-அமைச்சர் விஜய் ஒரு குட்டிக் கதை சொல்லி, உங்க அப் பாவை காணோம் என்று கூறிதி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சட்ட மன்றத்திற்கு வரமுடி யாததை சூசகமாக சுட்டிக் காட்டினார். இதற்கு, தி.மு.க. தரப்பினரும் சமூக வலைத்த ளங்களில் கடும் எதிர்வினை ஆற்றினர்.

அதன் தொடர்ச்சியாக முன்னாள் அமைச்சர் கே. என்.நேருஅளித்த பேட்டியில் மு.க.ஸ்டாலின் சீக்கிரமாக சட்டமன்றத்திற்குள் வந்து பொறுப்பேற்பார் என்று தெரி வித்தார். இதன் மூலம் மு.க.ஸ்டாலின் திருச்சி இடைத்தேர்தலில் போட்டி யிடலாம் என்று அரசியல் நோக்கர்கள் கருதினர்.

இந்த நிலையில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்திற்கு வந்து தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை சந்தித்தார். அதைத் தொடர்ந்து நிருபர் கள் மு.க.ஸ்டாலினிடம் நீங் கள் திருச்சி கிழக்கு சட்ட மன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவீர்களா? என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த மு.க.ஸ்டாலின் இன்னும் முடிவு செய்யவில்லை என்று தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.