கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு திருவெறும்பூரில் இலவச கண் பரிசோதனை முகாம் : முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் தொடங்கி வைத்தார்

0 17
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 6  திமுத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 103-வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி திருவெறும்பூரில் மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம்  நடைபெற்றது.

இந்த முகாமினை திருச்சி தெற்கு மாவட்ட கழகச் செயலாளரும் முன்னாள் அமைச்சர்ருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி துவக்கி வைத்தார்.

திருவெறும்பூர் தெற்கு ஒன்றியம், அண்ணாநகர் வடக்கு கிளை செயலாளர் எஸ்.தங்கமணி ஏற்பாட்டில் உடன் திருச்சி மாவட்ட பார்வைத்திறன் தடுப்பு சங்கம் இணைந்து, மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையுடன் இணைந்து மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் SRM நர்சரி பள்ளி, பேஸ் 2, அண்ணாநகர், பகுதியில் நேற்று நடைபெற்றது.

இந்த முகாமில் ஒன்றிய கழகச் செயலாளர் கங்காதரன் திருச்சி மாநகரக் கழக செயலாளர் மு மதிவாணன் மற்றும் ஒன்றிய கழக நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

இந்த முகாமில் கண் புரை, பார்வைக் குறைபாடு உள்ளிட்ட கண் தொடர்பான அனைத்து நோய்களுக்கும் இலவச பரிசோதனை மேற்கொள்ளப்படும். முகாமில் தேர்வு செய்யப்படும் கண்புரை நோயாளிகள், அன்றைய தினமே சிகிச்சைக்காக மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். அங்கு அவர்களுக்கு அறுவை சிகிச்சை, IOL லென்ஸ், மருந்து, தங்கும் வசதி, உணவு மற்றும் போக்குவரத்து ஆகிய அனைத்தும் இலவசமாக வழங்கப்படும்.

சர்க்கரை நோய்: விழித்திரையை பாதித்து பார்வை இழப்பை ஏற்படுத்தும் சர்க்கரை நோயாளிகள் முகாமில் கலந்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். ரத்தத்தில் சர்க்கரை அளவு 200mg-க்குள் இருப்பவர்கள் மட்டுமே அறுவை சிகிச்சைக்காக மதுரை அழைத்துச் செல்லப்படுவார்கள்.

கண் அழுத்த நோய்: 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் அறிகுறிகள் இல்லாமலேயே பார்வையை இழக்க நேரிடும் என்பதால், விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

கண்ணாடி: கிட்டப்பார்வை, தூரப்பார்வை மற்றும் வெள்ளெழுத்து பாதிப்பு உள்ளவர்களுக்கு, பரிசோதனைக்குப் பிறகு கண் கண்ணாடிகள் முகாம் நடைபெறும் இடத்திலேயே ரூ.300 விலையில் வழங்கப்பட்டது.

200க்கும் மேற்பட்டவர்கள் இம்முகாமில் கலந்து கொண்டனர்.

 

Leave A Reply

Your email address will not be published.