லால்குடியில் விளைநிலங்களில் விழுந்த மின்கம்பங்கள் சீரமைப்பு : அடிப்பகுதியில் கான்கிரீட் அமைக்காததால் விவசாயிகள் அச்சம்

0 14
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 6  லால்குடியில்  விவசாய வயல் பகுதியில்  அமைக்கப்பட்டுள்ள  மின்கம்பங்களின் அடிப்பகுதியில் சிமெண்டு கான்கிரீட் அமைக்க விவசாயிகள் கோரிக்கை

திருச்சி மாவட்டம் லால் குடி அருகே எல் அபிஷேகபுரம் பகுதியில் கடந்த 5 ஆண் டுகளுக்கு முன்பு துணை மின் நிலையம் தொடங்கப்பட்டது. பூவாளூர் துணை மின் நிலையத்தில் இருந்து மணக்கால், நன்னிமங்கலம், மும்முடி சோழமங்கலம் வழியாக விளை நிலங்களில் 40 அடி உயரமுள்ள மின்கம்பங்கள் ஊன்றப்பட்டு மின்பாதை அமைக்கப்பட்டு 10 கிலோ வாட்உயர் அழுத்தமின்சாரம் எல்..அபிஷேகபுரம் துணை மின் நிலையத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது.
பூவாளூர் முதல் மும்முடி சோழமங்கலம் வரை 100-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் ஒப்பந்ததாரர் மூலம் ஊன்றப்பட் டது. மின்கம்பங்கள் சாய்ந்து விழாமல் உறுதியாக இருப்பதற்கு அதன் அடிப்பகுதியில் சிமெண்டு கான்கிரீட் அமைக்காமல் வயல் மண்ணை எடுத்து அமைத்தனர். இத னால் மழை மற்றும் வயலில் அடிக்கடி தண்ணீர் பாய்ச்சுவதில் மின்கம்பங்கள் அடியில் மண் அரித்து முழுமையாக சேதமடைந்து மின்கம்பங்கள் மட்டும் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது. இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளுக்கு விவசாயிகள் பலமுறை தெரிவித்தும் எந்தவித நடவடிக்கை யும் எடுக்கவில்லை.

இந்தநிலையில் கடந்த  2 ஆம் தேதி மின்கம்பங்கள் அடுத்தடுத்து முறிந்து விழுந்தன. போது, வயல்களில்  விவசாயிகள் யாரும் இல்லாத காரணத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மேலும், எல் அபிஷேகபுரம் துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் செய்யப்படும் அனைத்து பகுதிகளிலும் மின் வினியோகம் துண்டிக்கப்பட்டதால் 2 நாட்கள் கிராமங்கள் இருளில் மூழ்கின. இதனால், முதியவர்கள், நோயாளிகள் கர்ப்பிணிகள், சிறுவர்கள் உள்பட அனைத்து தரப்பினரும் மிகவும் சிரமம் அடைந்தனர்.

இதையடுத்து   மின்வாரிய அதிகாரி கள், ஊழியர்கள் இரவு, பகல் பாராமல் வயல்களில் சாய்ந்த மின்கம்பங்களை குழி தோண்டி ஊன்றி மின்கம்பிகளை சீரமைத்தனர். இதனால் அப்பகுதியில் 4 ஆம் தேதி முதல் சீராக மின்சாரம் வழங்கப்பட்டது.

ஆனால், மின்கம்பங்களின் அடிப்பகுதியில் சிமெண்டு கான்கிரீட் அமைக்காமல் வயலில் உள்ள மண்ணை கொண்டு மூடி சென்றுள்ளனர்.  இதனால் விவசாயிகள் வயலில் தண்ணீர் பாய்ச்சும் பட்சத்தில் மண் முழுமையாக கரைந்து  மீண்டும் மின்கம்பங்கள் சிதிலமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.

எனவே, சம்பந்தப்பட்ட மின் வாரிய துறை அதிகாரிகள் வயல்களில் ஊன்றப்பட்ட மின்கம்பங்களின் அடிப்பகுதியில் சிமெண்டு கான்கிரீட் , அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.