ஸ்ரீரங்கம் கோவில் தலைமை அர்ச்சகர் செல்போன் எண்ணை முடக்கி மோசடி
திருச்சி, ஜூலை 6 ஸ்ரீரங்கம் கோவில் தலைமை அர்ச்சகர் செல்போன் எண்ணை முடக்கி மோசடி
திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் தலைமை அர்ச்சகர் சுந்தர்பட் டர். இவருடைய செல்போன் எண் மற்றும் இவரது மனைவியின் செல்போன் எண்ணை மர்ம ஆசாமிகள் முடக்கி ஹேக் செய்து) பணம் பறிக்க முயன்றுள்ளனர். அதாவது அவசரமாக பணம் தேவைப்படுவதாக சுந்தர்பட்டர் கேட்பதுபோல் குறுஞ்செய்தி அனுப்பி இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.
இது பற்றி அறிந்த சுந்தர்பட்டர் திருச்சி மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். மேலும், இது குறித்து அவர் வீடியோ பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில், தான் யாரிடமும் எந்தவித பண உதவியும் கேட்கவில்லை.அவ்வாறு என்னைப்போல் மர்ம ஆசாமிகள் திட்டமிட்டு இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் அவர்களுக்கு பணம் அனுப்ப வேண்டாம். என்னை தொடர்பு கொண்டு இது பற்றி கேட் காமலேயே எனது நட்பு வட்டத்தை சேர்ந்த 3 பேர் ரூ.1 லட் சம் வரை மோசடி நபர்களுக்கு அனுப்பி விட்டதாக தெரி கிறது. எனவே இனிமேல் எச்சரிக்கையாக இருங்கள் என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.