ராக்கின்ஸ் சாலையில் எரியாத தெருவிளக்குகள் : சீரமைக்க கோரிக்கை

0 12
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 6  திருச்சி ரெயில் நிலையத்தில் இருந்து மத்திய பஸ்நிலையம் செல்லும் வழியில் தெருவிளக்குகள் இன்றி இருளில் மூழ்கி கிடக்கும் ராக்கின்ஸ் சாலை

தமிழகத்தின் மையப்பகுதி யான திருச்சிக்கு பல்வேறு அடையாளங்கள் இருந்த போதிலும், திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்திற்கு தனிப் பெருமை உண்டு. வட, தென் மாவட்டங்களை சேர்ந்த பய ணிகளுக்கு முக்கிய சந்திப்பு பகுதியாக தற்போது வரை இருந்து வருகிறது.

திருச்சி ஜங் ஷன் ரெயில் நிலையத்திற்கு தினமும் 40 ஆயிரம் பயணி கள் வரை வந்து செல்கின்ற னர். குறிப்பாக இரவு நேரங் களில் தான் அதிக ரெயில்கள் திருச்சியை கடந்து செல்கின் றன. இவ்வாறு இரவு நேரங் களில் திருச்சிக்கு ரெயிலில் வந்து இறங்கும் பயணிகள் 2-வது நுழைவுவாயில் மற்றும் பிரதான நுழைவுவாயில் வழியாக வெளியே வந்து ரவுண் டானா பகுதிக்கு வந்து பஸ்நிலையத்துக்கு சென்று தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்கிறார்கள்.
அதிலும் வடமாநிலங் களில் இருந்து இரவு நேரம் வரும் ரெயில்கள், பெங்களூ ருவில் இருந்து வரும் ரெயில் களில் அதிக வெளிமாநிலத்தி னர், சுற்றுலா பயணிகள் ராக் கின்ஸ்ரோடு வழியாகத்தான் திருச்சி மத்திய பஸ்நிலையத் துக்கு செல்கிறார்கள். ஆனால் மாநகரின் முக்கியமான மையப்பகுதியில் உள்ள இந்த சாலையில் உள்ள மின்கம்பங் களில் ஒரு தெருவிளக்குகள் கூடஇல்லைஎன்பது மிகவும் வேதனை அளிப்பதாக பொதுமக்களும், அப்பகுதி ஆட்டோடிரைவர்களும் குற்றம் சாட்டுகிறார்கள். முன்பு மத்திய பேருந்து நிலையம் பயன்பாட்டில் இருந்ததால். இரவு 11 மணி வரை அந்த பகுதியில் கடைகள் திறந்து இருப்பதால் கடைகளின் வெளிச்சத்தில் இருள் தெரியாது.

ஆனால் தற்போது பஞ்சப்பூர் பேருந்து நிலையம் செயல்பாட்டிற்கு வந்துள்ளதால், விளக்குகள் எரியாமல்,  அதன்பிறகு காலை விடியும் வரை அந்த சாலைஇருளில் மூழ்கித்தான் கிடக்கிறது. இதனால் வெளி யூரில் இருந்து நள்ளிரவில் திருச்சி ரெயில் நிலையத்தில் வந்து இறங்கும் பயணிகள், குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே இரவு நேர பஸ் சேவை இருப்பதால் அந்த இருளில் தான் மத்திய பஸ்நிலையத் துக்கு நடந்து செல்கிறார்கள். இதை பயன்படுத்தி அப்பகுதியில் திருடர்கள் பயணிக ளின் உடைமைகளை பறித்து செல்வது அவ்வப்போது நடந்து வருகிறது. மாநகரில் எல்லை பகுதியில் இருக்கும் தெருவிளக்குகளை அகற்றி புராதன மின்விளக்குகளை பொருத்தும் மாநகராட்சி நிர் வாகம், திருச்சியின் உயிர்நாடியாக விளங்கும் ஜங்ஷன் பகுதியில் ராக்கின்ஸ் சாலையில்  உடனடியாக தெருவிளக்குகளை அமைக்க என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.