வழிப்பறிக்கு முயற்சித்த ரவுடிகள் உள்பட 6 பேர் கைது
திருச்சி, ஜூலை 9 திருச்சி, ஸ்ரீரங்கம் கீழசித்திரை வீதியை சேர்ந்தவர் சுரேஷ் (33). இவர் நேற்று முன்தினம் காலை 6 மணி அளவில் பாலக்கரை அருகே உள்ள உய்யகொண்டான் வாய்க் கால் கரைபகுதிக்கு சென்ற போது, 6 பேர் கொண்ட கும் பல் அரிவாளை காட்டி அவரை மிரட்டி பணம் பறிக்க முயன்றனர்.
இதுகு றித்த புகாரின் பேரில் பாலக் கரை போலீசார் வழக்குப்ப திவு செய்து சுரேசை மிரட்டி பணம் பறிக்க முயன்ற பீமநகர் பகுதியை சேர்ந்த ரவுடிகள் வீரமுத்து (28), கிறிஸ்டோன் (22) மற்றும் பிரிட்டோ (21), சாம்ராஜ் (47), ஜேக்கப் ரோச் (42), எபினேசர் சரண் (29) ஆகிய 6 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடம் இருந்து அரிவாள் பறிமுதல் செய்யப் பட்டது.