பரிகாரம் செய்வதாக கூறி பெண்ணிடம் நகை- பணம் பறித்த வாலிபர் : போலீசில் ஒப்படைப்பு

0 11
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 9 திருவெறும்பூர் அருகே பரிகாரம் செய்வதாக கூறி பெண்ணிடம் நகை- பணம் பறித்த வாலிபர் பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்

திருவெறும்பூர் அருகே உள்ள கூத்தைப்பார் வடக்கு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கதிர் இவரது மனைவி செல்ல பாப்பு (வயது 25). இந்த நிலையில் நேற்று இவரது வீட்டு கதவை தட்டியவாலி பர் ஒருவர் ரூ.40 கொடுத் தால் குறி சொல்வதாக கூறி யுள்ளார். மேலும் வீட்டுக் குள் வந்தால்தான் குறி சொல்ல முடியும் ஆதலால் கதவை திறக்குமாறு கூறியுள் ளார். கதவை திறந்ததும் வீட் டுக்குள் வந்த அவர் செம்பு, கடுகு ஆகியவற்றை எடுத்து வரும்படி கூறியுள்ளார்.
பின்னர் செல்லபாப்பு கையில் வாலிபர் மை தட வியதும் அவர் சுயநினைவை இழந்து வீட்டில் உள்ள ரூ.4 ஆயிரம், தான் அணிந்தி ருந்த தோடு, தங்க சங்கிலி, மோதிரம் ஆகியவற்றை எடுத்துக்கொடுத்துள்ளார். அதனை பெற்ற அந்த வாலிபர் மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.பின்னர் சிறிது /நேரத்தில் தன்னிலைக்கு /வந்த செல்லபாப்பு நடந்த /வற்றை அக்கம்பக்கத்தினரி டம் தெரிவித்துள்ளார். இத னையடுத்து அங்கிருந்த இளைஞர்கள் அந்த வாலி பரை விரட்டி பிடித்தனர். பின்னர் திருவெறும்பூர் போலீசாருக்கு தகவல் தெரி வித்தனர். போலீசார் விரைந்து வந்து அந்த வாலிபரை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.