நீர்வளத்துறை சார்பில் செயல்படுத்தப்படும் திட்டப்பணிகள் : அமைச்சர் ஆனந்த் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

0 17
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 9 திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்த மாவட்ட அளவிலான விரிவான ஆய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் தலைமை வகித்தார்.

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் கீழ் நடைபெறும் பின்வரும் முக்கியப் பணிகளின் தற்போதைய நிலை குறித்து துறை அதிகாரிகளிடம் விரிவாகக் கேட்டறிந்தார். குடிநீர் வழங்கல் திட்டங்கள் மற்றும் புதிய குடிநீர் இணைப்புகளை விரைந்து வழங்குதல். வீடு வழங்கும் திட்டங்களின் கட்டுமானப் பணிகளை நிர்ணயிக்கப்பட்ட காலக் கெடுவுக்குள் முடித்தல். திடக்கழிவு மேலாண்மைப் பணிகள் மற்றும் ஊரகச் சாலை மேம்பாட்டுத் திட்டங்கள். மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
நிலுவையில் உள்ள பணிகளை முடித்து, மக்களுக்கு திட்டங்களின் முழுப்பயனும் காலதாமதமின்றி கிடைப் பதை மாவட்ட நிர்வாக விரைந்து மும், சம்பந்தப்பட்ட அதி காரிகளும் ஒருங்கிணைந்து உறுதி செய்ய வேண்டும். திட்டங்களின் தரத்தில் எவ்வித சமரசமும் இருக் கக்கூடாது என அமைச்சர் ஆனந்த் அறிவுறுத்தினார்.

இதனைத் தொடர்ந்து ஆற்றுப் பாதுகாப்பு கோட்டம் மற்றும் அரியாறு வடி நிலக்கோட்டங்களின் கீழ் நடைபெறும் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
ஆறுகள், கால்வாய் கள், வடிகால்கள் மற்றும் ஏரிகளின் பராமரிப்புப் பணிகள். முக்கியப் பாச னக் கால்வாய்கள் மற் றும் பாசன வசதி பெறும் ஆயக்கட்டுப் பகுதிகள். 2025-26 ஆம் ஆண்டிற்கான அறிவிப்புப் பணிகள், கால்வாய் புனரமைப்பு, கரைப்பாதுகாப்பு, மதகுகள் மற்றும் தடுப்பணைகள் கட்டு க்ஷதல். சிறப்புத் தூர்வாரும் பணிகள் மற்றும் நீர்வளக் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

இக்கூட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை அரசுச் செயலாளர் பிரஷாந்த் வாட்நேரே, மாவட்ட ஆட்சியர் பிரத்திக்தாயள், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) சுவாதி, சட்டப் பேரவை துணைத்தலைவர் ரவிசங்கர், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத் தலைவர் கிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.