துறையூர் செல்லும் தனியார் பேருந்தின் பின்புற ஏணியில் ஏறி ஆபத்தான பயணம் : காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

0 15
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 11  துறையூரில் தனியார் பஸ்சின் பின்புற ஏணியில் நின்று பயணம் செய்தவர்களால் பரபரப்பு
துறையூர் பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு நேற்று மாலை திருச்சி நோக்கி தனி யார் பஸ் சென்றது. இந்த நிலையில் அந்த பஸ்சில் கூட் டம் அதிகமாக இருந்ததால் பஸ்சின் பின்புறத்தில் உள்ள ஏணிகளில் 2 பேர் நின்ற படியே ஆபத்தான முறையில் பயணம் செய்தனர்.

இந்த காட்சியை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் கண்டு அதிர்ச்சி அடைந்த னர்.
உயிருக்கு ஆபத்தை ஏற்ப டுத்தக்கூடிய வகையில் நடை பெற்ற இந்த செயலால் விபத்து அபாயம் ஏற்பட்ட தாக அவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

பைக் ரேஸ்:

அது மட்டுமில்லாமல் துறையூர் பாலக்கரையில் இருந்து முசிறி பிரிவு ரோடு வரையும், முசிறி பிரிவு ரோட்டில் இருந்து புதிய பஸ் நிலையம் வரையிலும், புதிய பஸ் நிலையத்தில் இருந்து  மீண்டும் பாலக்கரை வரை மாலை 5 மணியிலிருந்து  இருசக்கர வாகனங்களில்  சில இளைஞர்கள் ரேசில் ஈடுபடுவது வழக்க மாக உள்ளது.
இந்த ரேசில் வெற்றிபெறுபவர்களுக்கு ரூ.2 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது. தற்போது துறையூரில் அதிக அளவில் இந்த ரேஸ் நடத்தப்படுகிறது. இதில் ஈடுபடுவர்கள் மட்டுமின்றி  அப்பாவிகளும் பலியா கும்  நிலை உள்ளது. போக்குவரத்து அதிகாரிகள்  ஆய்வு செய்து ரேஸ் நடத்துபவர்கள் மீது நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.