பள்ளி மாணவர்களுக்காக புதிய வழித்தடத்தில் அரசுப் பேருந்து சேவை : மணப்பாறை எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

0 12
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 11  மணப்பாறை அருகே பள்ளி மாணவர்களுக்காக புதிய வழித்தடத்தில் அரசுப்பேருந்தை தொடங்கி வைத்த சட்ட மன்ற உறுப்பினர்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள குமரம்பட்டி, சுக்காவளி பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் கீரனூர், புதுவாடியில் அரசு பள்ளிகளில் பயின்று வருகின்றனர். அதேபோல் மேல்நிலை கல்வியை நடுப்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்று வரும் நிலையில் இவர்கள் பள்ளிக்கு செல்ல காலை மற்றும் மாலை நேரங்களில் அவர்களது கிராமத்தில் இருந்து பேருந்து வசதி இல்லாததால் சுமார் 5 ல் இருந்து 8 கிலோமீட்டர் தூரம் நடந்தும் வாகனங்களில் சென்றும் கல்வி பயில வேண்டிய நிலை இருந்தது. இதனால் தங்கள் பகுதிக்கு பேருந்து வசதி செய்து தரவேண்டும் என நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் இது சம்பந்தமாக அந்தபகுதி மாணவர்கள் சமூக வலைதளத்தில் தங்களுக்கு பேருந்து வசதிசெய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்து வீடியோ வெளியிட்டிருந்தனர்.

இந்நிலையில் இன்று மாலை நடுப்பட்டியிலிருந்து கல்பட்டி, கீரனூர், புதுவாடி வழியாக குமரம்பட்டிக்கு புதிய வழித்தடத்தில் பேருந்து துவக்க விழா நடுப்பட்டியில் நடைபெற்றது. புதிய பேருந்து சேவையை மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் கதிரவன் கொடியசைத்து துவக்கிவைத்து பேருந்தில் மாணவர்களுடன் பயணம் செய்தார். புதுவாடிக்கு சென்ற சட்டமன்ற உறுப்பினர் கதிரவனுக்கு மக்கள் நன்றி தெரிவித்தனர். புதுவாடிக்கு பேருந்து சென்றதும் மாணவர்கள் மகிழ்ச்சி ஆரவாரமிட்டனர். பின்னர் தங்களின் நீண்டகால கோரிக்கை நிறைவேறிய மகிழ்வுடன் பேருந்தில் ஏறி தங்கள் ஊருக்கு பயணம் செய்தனர்.

இந்நிகழ்வில்  வையம்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் பார்த்திபன், திருச்சி தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் திருநாவுக்கரசு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் லட்சுமிபாலன், மாவட்ட நிர்வாகி பரணிதரன், மாயவன்,பாக்கியலட்சுமி,சரஸ்வதி, ஒன்றிய நிர்வாகிகள் பரமசிவம், பெரியசாமி, சிவசக்தி, ஹரிஷ் குமார்,சஞ்சீவ், ராமசாமி, மாரிமுத்து, வசந்த்,சுரேந்திரன், போக்குவரத்து கழக அதிகாரிகள் சாமிநாதன், கார்த்திகேயன், பெருமாள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Leave A Reply

Your email address will not be published.