துவரங்குறிச்சி அருகே அடுத்தடுத்து 3 வீடுகளில் 15 பவுன் நகைகள் திருட்டு

0 15
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 11  துவரங்குறிச்சியை அடுத்த துவரங்குறிச்சி- மணப்பாறை சாலையில் அமைந்துள்ள கொண்டையம்பட்டியை சேர்ந்தவர்கள் சத்தியமூர்த்தி (வயது 45), பரமேஸ்வரன் (50). இவர்களது வீடு அடுத்தடுத்து உள்ளது. இந்த நிலையில் இவர்கள் நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு சென் னைக்கு சென்றுவிட்டனர்.

இந்த நிலையில் வீட்டின் அருகில் வசிப்பவர்கள் காலை எழுந்து பார்த்த போது இருவரது வீட்டின் பூட்டும் உடைக்கப்பட்டு கத வுகள் திறந்தபடியே கிடந்துள் ளன. இதைக்கண்ட அவர்கள் சத்தியமூர்த்தி மற்றும் பர மேஸ்வரன் ஆகியோருக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தனர்.
15 பவுன் நகைகள் திருட்டு இதேபோல் அதே கிராமத்தை சேர்ந்த பாண்டுரங் கன் என்பவர் நேற்று முன்தி னம் இரவு வீட்டை பூட்டி விட்டு அருகில் உள்ள மற் றொரு வீட்டிற்கு தூங்க சென்று விட்டார். மீண்டும் நேற்று காலை எழுந்து வந்து பார்த்தபோது வீட்டில் கதவு கள் உடைக்கப்பட்டு பீரோ வில் இருந்த நகை மற்றும் பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றதுதெரியவந்தது.

இது குறித்து 3 பேரும் துவரங்குறிச்சி போலீஸ் நிலையத் தில் தனித்தனியாக புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் 3 பேர்களின் வீடுக ளுக்கு சென்று விசாரணை நடத்தினர். இதில் 15 பவுன் நகைகள் மற்றும் ரூ.50 ஆயிரம் திருடப்பட்டது தெரியவந் தது.

இது தொடர்பாக போலீ சார் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்மநபர்களை வலைவீசி தேடி வரு கின்றனர். இதேபோல் அருகே உள்ள 2 வீடுகளில் திருட்டு முயற்சி நடைபெற்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.