மணப்பாறை அரசு மருத்துவமனையில் குழந்தைகளுக்கு தாய்பால் புகட்டுவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு
திருச்சி, ஆக.6 மணப்பாறை அரசு மருத்துவமனையில் குழந்தைகளுக்கு தாய்பால் புகட்டுவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய தன்னார்வ அமைப்பினர்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் மணப்பாறை, அவினாசி மற்றும் தோகைமலை ரோட்டரி சங்கங்களின் சார்பில் உலக தாய்ப்பால் வாரவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. ஆகஸ்ட் 1 முதல் 7 ம் தேதி வரை உலக தாய்ப்பால் வாரவிழா கடைபிடிக்கப்படும் நிலையில் மணப்பாறை அரசு மருத்துவமனை நடைபெற்ற விழாவில் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள தாய்மார்கள் மற்றும் மகப்பேறு சிகிச்சைக்காக வந்துள்ளவர்களுக்கு குழந்தைகளுக்கு தாய்ப்பால் புகட்டுவதன் அவசியம் குறித்தும் அதனால் குழந்தைகளுக்கு உண்டாகும் நன்மைகள் குறித்தும் இன்றைய காலகட்டத்தில் பெண்களுக்கு தாய்ப்பால் குறித்த சந்தேகங்களை போக்கும் வகையில் மகப்பேறு சிகிச்சையில் அனுபவமிக்க மருத்துவர்கள் மற்றும் குழந்தைகள் நல மருத்துவர்கள் தாய்மார்களிடம் விளக்கிக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மேலும் குழந்தை பெற்ற தாய்மார்கள் 100 பேருக்கு ஊட்டச்சத்து பவுடர், பழம், டவல் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பரிசுப்பையும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் தனியார் செவிலியர் கல்லூரி மாணவிகள் தாய்ப்பாலின் அவசியம் குறித்து சிறு நாடகம் மூலம் தத்ரூபமாக நடித்துக்காட்டி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தனர். இதில் ரோட்டரி அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், தாய்மார்கள் கலந்து கொண்டனர்.