மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி

0 445
Stalin trichy visit

திருச்சி நம்பர் 1 டோல்கேட்டை அடுத்து சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கூத்தூர் பேருந்து நிலையத்தில் 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் படுகாயமடைந்து சாலையில் கிடப்பதாக கொள்ளிடம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் கொள்ளிடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயமடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் இறந்தவர் மீது, தாளக்குடி பகுதி தனலட்சுமி நகரை சேர்ந்த வெங்கடேசன் மகன் கௌதமன்(வயது 22) என்பவர் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் முதியவர் உடலில் பலத்த காயமடைந்தது தெரியவந்தது. இந்நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து கொள்ளிடம் நம்பர் 1 டோல்கேட் போலீசார் கௌதமன் மீது வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்?, எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.