துவாக்குடி பாசன மேலாண்மை பயிற்சி நிலையத்தில் விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு பயிற்சி

0 21
Stalin trichy visit

திருச்சி, ஆக.15 துவாக்குடி பாசன மேலாண்மை பயிற்சி நிலையத்தில் திருச்சி மாவட்ட
விவசாயிகளுக்கான தேனீ வளர்ப்பு பயிற்சி.

திருச்சி மாவட்டம் துவாக்குடியில் அமைந்துள்ள பாசன மேலாண்மை பயிற்சி நிலையத்தில் திருச்சி மாவட்ட விவசாயிகளுக்கான “தேசிய தேனீக்கள் தினம்” தேனியை பாதுகாப்போம், பூமியை காப்போம் என்ற தலைப்பில் தேனீ வளர்ப்பு குறித்த பயிற்சி நடைபெற்றது.

இப்பயிற்சி பாசன மேலாண்மை பயிற்சி நிலையத்தின் தலைவர்  பொதுப்பணி திலகம்  தலைமையிலும் மற்றும் இணை இயக்குனர் பயிற்சி  இலக்கு பூபதி  தொழில்நுட்ப ஆலோசனை படியும் நடைபெற்றது.

இப்பயிற்சிக்கு இணை பேராசிரியர்  ராஜேஸ்வரி தொடக்க உரையாற்றினார்.

இப்பயிற்சியில் தேனீக்கள் வளர்ப்பின் முக்கியத்துவம் மற்றும் மருத்துவ பயன்கள், தேனீக்களின் வாழ்க்கை சுழற்சி, தேனீக்களின் வகைகள் மற்றும் கூட்டு மேலாண்மை, தேனீக்களில் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை, தேனில் மதிப்பு கூட்டுதல் மற்றும் சந்தைப்படுத்துதல் தொடர்பான தொழில்நுட்ப உரையினை எம்.எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி
அறக்கட்டளையின் தொழில்நுட்ப வல்லுநரும்,உதவி பேராசிரியருமான  பாரதிதாசன், தொழில்நுட்ப உரையாற்றினார்

மேலும் இப்பயிற்சியில் தேன் அறுவடை செய்யும் போது கையாள வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் பற்றி செயல் விளக்கமும் செய்து காண்பிக்கப்பட்டது. பாசன மேலாண்மை பயிற்சி நிலைய இணை பேராசிரியர் ராஜேஸ்வரி வழிகாட்டுதலோடு இணை ஆராய்ச்சியாளர்கள் இமயா,அருணா தேவி மற்றும் ரமா பிரபா நளினி ஆகியோர் இப் பயிற்சியில் கலந்து கொண்டு அனைத்து வசதிகளையும் செய்திருந்தனர். இப்பயிற்சியில் திருச்சி மாவட்டத்தைச் சார்ந்த 40க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

பயிற்சியின் நிறைவில் அனைத்து விவசாயிகளுக்கும் பயிற்ச்சிக்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.