திருச்சி விமான நிலையத்தில் பெண் பயணியிடம் ரூ.90 லட்சம் பறிமுதல்

0 18
Stalin trichy visit

திருச்சி, ஆக.19 திருச்சி விமான நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் இரவு 11.15 மணி அளவில் மலேசியா தலைநகர் கோலாலம்பூருக்கு ஏர் ஏசியா விமானம் புறப்பட தயாராக இருந்தது. முன்னதாக அந்த விமானத்தில் பயணம் செய்ய இருந்த பயணிகளின் உடைமைகளை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் சோதனை செய்தனர். அப்போது ராமநாதபு ரம் மாவட்டம் வழுத் தூர் பகுதியைச் சேர்ந்த தஸ்லீமா பானு (வயது 40) என்ற பெண் பயணி யின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டதை தொடர்ந்து அவரது உடைமைகளை சோதனை செய்தனர். இதில் இந்திய பணம் ரூ.65 லட்சமும், வெளிநாட்டு பணம் ரூ.25 லட்சமும் என மொத்தம் ரூ.90 லட்சம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் அந்த பயணியை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளி டம் ஒப்படைத்தனர். பணத்தை பறிமுதல் செய்த சுங்கத்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.