அங்கக வேளாண்மை, இயற்கை இடுபொருட்கள் தயார் செய்தல் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி

0 25
Stalin trichy visit

திருச்சி, ஆக.20 அங்கக வேளாண்மை, இயற்கை இடுபொருட்கள் தயார் செய்தல் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே மணக்கால் கிழக்கு கிராமத்தில் அட்மா திட்டத்தில் அங்கக வேளாண்மை, இயற்கை இடுபொருட்கள் தயார் செய்தல் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி திருச்சி உழவர் பயிற்சி நிலையம் வேளாண்மை துணை இயக்குநர் திரு. ராஜசேகரன் தலைமையில் நடைபெற்றது.

இதில் ரசாயன உரங்கள் பயன்பாடு குறைத்தல், வரப்பு ஓரத்தில் பயறு வகை விதைப்பு, பசுந்தாள் உரம் அளிக்கும் தக்கைபூண்டு, சணப்பை விதைப்பு செய்தல்,வயல்களில் பறவை தாங்கி அமைத்தல், சூரிய ஒளி விளக்கு பொறி வைத்து பூச்சிகள் கவர்ந்து அழித்தல் பற்றி விரிவாக விளக்கி கூறினார். உழவர் பயிற்சி நிலையம் வேளாண்மை அலுவலர் திரு நாகராசன் பேசுகையில் வேளாண்மை இடுப்பொருட்கள் விற்பனை உரிமம் பெறும் வழிமுறைகள் பற்றி விரிவாக விளக்கி கூறினார்.அதன் பின்பு AK அந்தநல்லூர் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் திரு. ஹரிகிருஷ்ணன் அங்கக இடுபொருட்கள் கீழ்கண்ட முறையில் தயார் செய்து விவசாயிகள் பயன்படுத்தியிட கேட்டுக்கொண்டார். ஜீவாமிர்தம் தயாரிப்பதற்கான தேவையான பொருட்கள் மற்றும் செய்முறை பற்றிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
தேவையான பொருட்கள்மாட்டுச்சாணம் –
10 கிலோமாட்டு கோமியம் – 10 லிட்டர்வெல்லம் (அல்லது கரும்புச் சாறு – 4 லிட்டர்) – 2 கிலோதண்ணீர் – 200 லிட்டர்கடலைமாவு / தட்டைப்பயறு மாவு / உளுந்து மாவு – 2 கிலோஈரமான மண் – 1 கைப்பிடிபிளாஸ்டிக் டிரம் (200 லிட்டர் கொள்ளளவு) – 1 எண்ணம்
செய்முறை
200 லிட்டர் தண்ணீரில் சாணம், கோமியம், வெல்லம் அல்லது கரும்புச் சாறு சேர்க்க வேண்டும்.அதனுடன் கடலைமாவு/தட்டைப்பயறு மாவு/உளுந்து மாவு மற்றும் ஈரமான மண் ஆகிய அனைத்தையும் சேர்க்க வேண்டும்.இவற்றை பிளாஸ்டிக் பக்கெட்டில் (டிரம்மில்) சேர்த்து நன்றாக மூடி வைக்க வேண்டும்.தினமும் காலை, மதியம், மாலை என மூன்று வேளைகளிலும் கடிகார முள் சுழற்சி முறைப்படி (clockwise) நன்றாகக் கலக்கிவிட வேண்டும்.இரண்டு முதல் மூன்று நாளில் இந்த ஜீவாமிர்தக் கரைசல் தயாராகிவிடும்.இதனை தயாரித்த ஒரு வாரத்திற்குள் பயன்படுத்த வேண்டும்.இந்த கரைசலை எப்போதும் நிழலில் வைத்து பராமரிக்க வேண்டும்.கரைசலை வடிகட்டி, ஒட்டும் திரவம் (காதி சோப் அல்லது ஆறிய அரிசிக்கஞ்சி) சேர்த்துப் பயன்படுத்தலாம்.
பயன்படுத்தும் முறை
இலை வழி தெளிப்பாக எல்லா வகை பயிர்களுக்கும் ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர் என்ற அளவில் பயன்படுத்தலாம்.ஒரு லிட்டர் ஜீவாமிர்தத்தை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து இலை வழி தெளிப்பால் பயன்படுத்தலாம்.
பயன்கள்
இரசாயன உரத்தால் மலடாகிய மண்ணிற்கு ஜீவாமிர்தம் ஒரு அருமருந்தாகும்.இதை மண்ணில் அளிப்பதால் மண்புழுக்கள் அதிகரிப்பதோடு நுண்ணுயிர்களைப் பெருக்கும்.பயிர்களுக்கு ஏற்படும் பூச்சி மற்றும் நோய் தாக்குதலைத் கட்டு படுத்தி மகசூல் அதிகம் பெறலாம் என கூறினார்.பயிற்சிக்கான ஏற்பாட்டினை வேளாண்மை உதவி இயக்குனர் லால்குடி திருமதி. சத்தியப்பிரியா, வேளாண்மை அலுவலர் திருமதி கௌசல்யா, உதவி வேளாண்மை அலுவலர் சந்திரசேகர் மற்றும் அட்மா திட்டம் வட்டார தொழில்நுட்ப மேலாளர் சபரிச்செல்வன், உதவி தொழில் நுட்ப மேலாளர்கள் கார்த்திக் , தமிழ்மணி ஆகியோர் செய்து இருந்தனர்

Leave A Reply

Your email address will not be published.