பயிர் கடன் தள்ளுபடி செய்யாததை கண்டித்து காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம்: வசாய சங்கத்தினர் அறிவிப்பு
திருச்சி, ஆக.20 பயிர் கடன் தள்ளுபடி செய்யாததை கண்டித்து சென்னையில் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்க உள்ளதாக அனைத்து விவசாய சங்கத்தினர் அறிவிப்பு
த.வெ.க அரசு தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி விவசாயிகளின் பயிர் கடன்கள் தள்ளுபடி செய்யவில்லை இந்த நிலையில் இது குறித்து தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு விவசாய சங்கங்களை சேர்ந்தவர்கள் ஆலோசனை கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் ஈசன் முருகசாமி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் விவசாய சங்கங்களின் தலைவர்கள் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.
அரசிடம் பயிர் கடன் தள்ளுபடி கேட்பது தொடர்பாக பல்வேறு ஆலோசனைகள் செய்யப்பட்டது கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஈசன் முருகேசன்,
விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிப்படி பயிர் கடன் தள்ளுபடி செய்யாததை வன்மையாக கண்டிக்கிறோம்.
தேர்தல் வாக்குறுதியில் அளித்தபடி கடன்களை தள்ளுபடி செய்யாமல் பிச்சை போடுவது போல் கடன் தள்ளுபடி செய்வது கண்டனத்திற்குரியது.
தமிழக அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்தும் பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தியும் வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் அனைத்து விவசாய சங்கங்கள் சார்பில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்க உள்ளோம்.
எம்.எல்.ஏக்களுக்கு விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி கேட்டால் நிதி இல்லை என்கிறார்கள்.
விவசாய சங்க பிரதிநிதிகளை அழைத்து எட்டு அமைச்சர்கள் பேச்சு வார்த்தை நடத்தினார்கள் பயிர் கடன் தள்ளுபடி தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அப்போது அவர்கள் தெரிவித்தார்கள் எங்களுக்கு ஏதாவது செய்வார்கள் என நம்பினோம். ஆனால் வச்சு செய்து விட்டார்கள்.
இந்த காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் தினம் தோறும் 2000 முதல் 3000 விவசாயிகள் கலந்து கொள்வார்கள். இந்த போராட்டத்திற்கு அரசு அனுமதிக்கும் என நம்புகிறோம் அரசு அனுமதிக்க வில்லை என்றால் நாங்கள் நீதிமன்றம் சென்று அனுமதி பெறுவோம் அரசு அனுமதிக்காவிட்டாலும் நாங்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தார்.