சர்க்கரை விலை திடீர் உயர்வு : கிலோ ரூ. 68-க்கு விற்பனை

0 18
Stalin trichy visit

திருச்சி, ஆக.21 சர்க்கரை விலை திடீர் உயர்வு கிலோ ரூ. 68-க்கு விற்பனை
பண்டிகை கால தேவை அதிகரிக்கும் நிலையில் திருச்சியில் சர்க்கரையின் விலை திடீரென உயர்ந்து ஒரு கிலோ ரூ.68-க்கு விற்கப்படுகிறது.
வீடுகளில் தினசரிபயன்பாட்டுக்கு சர்க்கரை மிகவும் முக்கியம். வழக்கமான நாட்களில் பயன்படுத்துவ தைவிட விழாக்காலங்களில் சர்க்கரை பயன்பாடு மேலும் அதிகரிக்கும். வரு கிற நாட்களில் விநாயகர் சதுர்த்தி, தசரா, நவராத்திரி, தீபாவளி போன்ற பண்டிகைகள் வர உள்ளன.
அப்போது வீடு, ஓட்டல்களில் இனிப்பு வகைகள் செய்வதற்கு சர்க்கரையின் தேவை அதிகமாக இருக்கும். ஆனால் இருப்பு குறைவு காரணமாக தற்போது சர்க்கரைக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதன் காரணமாக சர்க்கரை விலையும் உயர்ந்துள்ளது. திருச்சியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ சர்க் கரை ரூ.48-க்கு விற்பனையானது. ஆனால் தற்போது திடீரென கிலோவுக்கு ரூ.20 விலை உயர்ந்து, ஒரு கிலோ சர்க்கரை ரூ.68-க்கு விற்கப்படுகிறது. ஒரு சில சில்லறை விற்பனை கடைகளில் கிலோ ரூ.70 வரை விற்பனை செய்கி றார்கள். இதேநிலை நீடிக்கும் பட்சத்தில் வரும் நாட்களில் சர்க்கரை விலை மேலும் உயரக்கூடும் என்றும், இன்னும் 3 மாதங் களுக்கு சர்க்கரையின் விலை குறைய வாய்ப்பில்லை என்றும் வியாபாரிகள் கூறுகிறார்கள். சர்க்கரை இனித்தாலும் தற்போது அதன் விலை கசப்பதாக பொதுமக் கள் தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.