ஏலச்சீட்டு எடுத்து பணத்தை திருப்பி கட்டாமல் பல லட்சம் மோசடி செய்தவர் மீது வழக்கு பதிவு

0 124
Stalin trichy visit

திருச்சி ஆக 24 திருச்சி பொன்மலை பொன்னேரிபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜோசப் அமல் இவரது மனைவி ஜெயந்தி (வயது 43) இவர் வீட்டில் ஏல சீட்டு நடத்தி வந்துள்ளார். இவரது ஏலச் சீட்டில் ஆனிப்பப்பியோலா என்ற பெண் ரூபாய் 6 லட்சம் மற்றும் இரண்டு லட்சம் மதிப்புள்ள 5 சீட்டுகளில் சேர்ந்துள்ளார். இதற்காக அவர் 9 மாதங்களாக ரூ. 9 லட்சத்து 90 ஆயிரத்தை கட்டி , ரூபாய் 7,40,600 பெற்றுள்ளார். பின்னர் மற்றொருவரின் ஏலச்சீட்டு பணமான ரூபாய் 5 லட்சத்து 70 ஆயிரத்தையும், ஜெயந்தி இடமிருந்து கடனாக ரூபாய் 10 லட்சத்து 75 ஆயிரத்தையும் பெற்றுள்ளார். இதையடுத்து அந்தப் பெண் பணத்தையும் திருப்பி தராமல் ஏமாற்றி வந்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட ஜெயந்தி திருச்சி மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தார். கமிஷனர் உத்தரவின் பெயரில் பொன்மலை போலீஸ் சார் ஆனிப்பப்பியோலா மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.