திருச்சியில் நடந்த மிலாடி நபி ஒற்றுமை பேரணி : அமைச்சர் முகமது பர்வேஸ் பங்கேற்பு
திருச்சி, ஆக. 27தமிழக தர்காக்கள் பேரவை சார்பில் திருச்சியில் நடந்த மிலாடி நபி ஒற்றுமை பேரணி – அமைச்சர் முகமது பர்வேஸ் பங்கேற்பு:-
இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகளில் ஒன்றான நபிகள் நாயகம் பிறந்த நாளான மிலாடி நபியை முன்னிட்டு, தமிழ்நாடு தர்காக்கள் பேரவை சார்பில் திருச்சி நத்தர்ஷா பள்ளிவாசல் முன்பு ஒற்றுமை பேரணி இன்று துவங்கியது இந்த ஒற்றுமை பேரணியை தமிழக அமைச்சர் முகமது பர்வேஸ் தலைமை தாங்கி கொடி அசைத்து தொடங்கி வைத்தார். முன்னதாக தமிழ்நாடு தர்காக்கள் பேரவையின் தலைவர் அமைச்சர் முகமது பர்வேசுக்கு சால்வை அணிவித்து வரவேற்றார். மேலே தமிழக வெற்றிக் கழகத்தின் திருச்சி கிழக்கு தொகுதி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற மிலாடி நபி ஒற்றுமை பேரணையானது திருச்சி நத்தர்ஷா பள்ளிவாசலில் தொடங்கி ராஜா பார்க் கீழரசாலை இப்ராஹிம் பூங்கா மரக்கடை வழியாக காந்தி மார்க்கெட்டில் நிறைவடைந்தது. இந்த ஒற்றுமை பேரணியில் குழந்தைகள் பெரியவர்கள் இளைஞர்கள் தர்காக்கள் பேரவை நிர்வாகிகள் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு மத நல்லிணக்கத்தை வலியுறுத்தியும் ஒற்றுமையை வலியுறுத்தி பேரணியாக சென்றனர்.
இந்த நிகழ்வில் தமிழக வெற்றி கழகத்தின் திருச்சி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் தர்கா, சவுகத் திருச்சி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் குடமுருட்டி கரிகாலன் திருச்சி மாநகர நிர்வாகிகள் முன்னாள் துணை மேயர் சீனிவாசன், முன்னாள் கவுன்சிலர் செந்தில்நாதன், நடிகர் ஜெரால்ட் மில்டன் வக்கீல் திலீப் குமார், காந்தி மார்க்கெட் பகுதி செயலாளர் கௌதமன் பாலக்கரை பகுதி செயலாளர் சூர்யா ஏர்போர்ட் பகுதி செயலாளர் வெள்ளைச்சாமி மலைக்கோட்டை பகுதி செயலாளர் சதீஷ்குமார் பாலக்கரை பகுதி செயலாளர் சிவக்குமார் காந்தி மார்க்கெட் பகுதி செயலாளர் நர்கீஸ் மலைக்கோட்டை பகுதி செயலாளர் கணேஷ் குமார் சிந்தாமணி பகுதி செயலாளர் ஜீவானந்தம் மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் மாநகர பகுதி வட்ட கிளைக் கழக பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்