அன்பில் பொய்யாமொழி நினைவு நாள் : மாநகர செயலாளர் மதிவாணன் அறிக்கை
திருச்சி, ஆக.27 திருச்சி தெற்கு மாவட்ட மாநகர செயலாளர் மு.மதிவாணன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில், திராவிட இயக்க முன்னணித் தலைவர்களில் ஒருவரான அன்பில் தர்மலிங்கம் மகனும் , திமுக இளைஞர் அணி தொடங்கப்பட்ட நாளில் இருந்து அதன் வளர்ச்சிக்கு உறுதுணையாய் இருந்தவருமான, முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மாநில இளைஞரணி துணைச் செயலாளருமான, அன்பில் பொய்யாமொழி 27 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, மாவட்ட கழக அலுவலகத்தில், அவரது திருவுருவப்படத்திற்கு நாளை (ஆக.28) காலை 8.00மணி அளவில் மாவட்ட செயலாளர் – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் கழக நிர்வாகிகளுடன் மாலை அணிவித்து மரியாதையை செலுத்தப்படுகின்றது.
அதனை தொடர்ந்து கீழ்கண்ட இடங்களில் அன்னதானம் நடைபெறுகின்றது.
மலைக்கோட்டை பகுதி காலை – 8.00 மணிக்கு விடிவெள்ளி மாற்றுத்திறனாளி பள்ளி சத்திரம் பேருந்து நிலையம், மார்கெட் பகுதி காலை – 8.20 மணிக்கு இ.பி. ரோடு முதியோர் இல்லம்,
பாலக்கரை பகுதி காலை – 8.30 மணிக்கு TELC பள்ளி கெம்ஸ்டவுன், கலைஞர் நகர் பகுதி காலை – 8.45 மணிக்கு விழியிழந்தோர் பள்ளி மன்னார்புரம், பொன்மலை பகுதி காலை – 09.00 மணிக்கு பறவை பவுண்டேஷன் எம்.ஜி.ஆர்.நகர் கொட்டப்பட்டு, அரியமங்கலம் பகுதி – மதியம் 12.30 மணிக்கு சங்கிலியாண்ட புரம், மாநகர கழகம் சார்பில் மதியம் – 12.40 மணிக்கு தஞ்சை ரோடு பால்பண்ணை மாநகர கழக அலுவலகம், காட்டூர் பகுதி மதியம் – 12.50 மணிக்கு அந்தோணியார் கோவில் முதியோர் இல்லம் காட்டூர், திருவெறும்பூர் பகுதி மதியம் – 01.00 மணிக்கு திருவெறும்பூர் பேருந்து நிலையம் .
இந்நிகழ்வில் மாநில, மாவட்ட, மாநகர நிர்வாகிகள், தலைமை செயற்குழு-பொதுக்குழு உறுப்பினர்கள்,பகுதி,ஒன்றிய,நகர, பேரூர், வட்ட, வார்டு, கிளை கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், மற்றும் தொண்டர்கள் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.