திருச்சி மாநகராட்சி ஆணையருக்கு எதிராக திமுக கவுன்சிலர்கள் திடீர் தர்ணா போராட்டம்

0 108
Stalin trichy visit

திருச்சி, ஆக.27 திருச்சி மாநகராட்சி ஆணையருக்கு எதிராக திமுக கவுன்சிலர்கள் திடீர் தர்ணா போராட்டம்

‎‎ திருச்சி மாநகராட்சி மாமன்ற சாதாரணக்கூட்டம் மேயர் மு.அன்பழகன் தலைமையில், ஆணையர் வீர் பிரதாப் சிங், துணை மேயர் திவ்யா தனக்கோடி ஆகியோர் முன்னிலையில் இன்று நடைபெற்றது.
‎இக்கூட்டத்தில் மண்டலக்குழுத் தலைவர்கள் மதிவாணன், துர்காதேவி, விஜயலட்சுமி கண்ணன், ஜெயா நிர்மலா,மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் , துணை ஆணையர், நகர பொறியாளர்,நகர் நல அலுவலர்,செயற்பொறியாளர்கள், மாநகராட்சி உதவி ஆணையர்கள், உதவி செயற்பொறியாளார்கள், சுகாதார அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

‎‎இந்த மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர் முத்து செல்வம் பேசுகையில் திருச்சி மாநகர பகுதிகளில் செண்டர் மீடியம் ஏன் இடிக்கப்படுகிறது என்கிற காரணம் கவுன்சிலர்களுக்கு தெரிவிக்கப்படுவதில்லை. மேலும் பொதுமக்களை விரட்டும் தொனியில் குடிநீர் வரி சொத்து வரி நோட்டீஸ் அனுப்பப்படுவதாக தெரிவித்த. திருச்சி பஞ்சபூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தை தூய்மைப்படுத்தும் தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த காலை உணவு திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்ட இந்த திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது ? இந்த மாநகராட்சியில் அதிகாரிகள் ஆட்சி நடக்கிறதா? மக்கள் பிரதிநிதிகளின் ஆட்சி நடக்கிறதா?

‎அதைத்தொடர்ந்து ஒட்டுமொத்தமாக மாநகராட்சி ஆணையருக்கு எதிராக திமுக கவுன்சில்கள் எழுந்து கவுன்சிலர்கள் ‎கூச்சலிட்டனர். அப்போது மண்டல குழு தலைவர் துர்கா தேவி, முத்துச்செல்வம்,காஜாமலை விஜய் ‎புஷ்பராஜ்,நீலா வேலு உள்ளிட்ட திமுக கவுன்சிலர்கள் திருச்சி மாநகராட்சி ஆணையர் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு கூச்சலிட்டனர் இதனால் மாநகராட்சி கூட்ட அரங்கில் பெரும் பரபரப்பு நிலவியது

Leave A Reply

Your email address will not be published.