அண்ணா விளையாட்டரங்கில் உடற்பயிற்சி கூடம் செயல்படும் நேரம் நீட்டிப்பு: மாவட்ட ஆட்சியர், எம்.பி.க்கு நன்றி தெரிவிப்பு

0 18
Stalin trichy visit

‎திருச்சி, செப். 1  திருச்சி கலெக்டர் எம்பி ஆகியோருக்கு அண்ணா விளையாட்டு அரங்கம் நவீன உடற்பயிற்சி கூடத்தின் உறுப்பினர்கள் நன்றி தெரிவிப்பு:-

திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் நவீன உடற்பயிற்சி கூடம் செயல்பட்டு வருகிறது தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தினால் நடத்தப்படும் இந்த உடற்பயிற்சி கூடத்தில் விளையாட்டு வீரர்கள் அரசு தனியார் நிறுவனங்களில் பணி புரிபவர்கள் வருடாந்திர மற்றும் மாதாந்திர அடிப்படையில் சந்தா தொகை செலுத்தி உடற்பயிற்சி செய்து வருகிறார்கள்.

‎அதன் அடிப்படையில் காலை நேரங்களில் பயிற்சி நேரம் காலை 6:00 மணி முதல் 11 மணி வரை உடற்பயிற்சி செய்து வந்தனர் இந்நிலையில் முன்னறிவிப்பு இன்றி காலை 6 மணி முதல் 9 மணி வரை குறைக்கப்பட்டது இதனால் அங்கு உடற்பயிற்சி செய்து வந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர் இது தொடர்பாக திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரத்தீப் தாயள் மற்றும் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் கிரிஸ்டோபர் திலக் ஆகியோரை நேரில் சந்தித்து உடற்பயிற்சி செய்வதற்கான நேரத்தை மீண்டும் காலை 11 மணி வரை நீட்டித்து தரும்படி கோரிக்கை மனு அளித்தனர்.

அதனைத் தொடர்ந்து மீண்டும் வழக்கம்போல் 11 மணி வரை நவீன உடற்பயிற்சி கூடம் செயல்படும் என அறிவிக்கப்பட்டது இந்நிலையில் வழக்கறிஞர் கமலக்கண்ணன் தலைமையில் வழக்கறிஞர் சரவண சுந்தர் முன்னிலையில் முன்னிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் விளையாட்டு ஆர்வலர்கள் மற்றும் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து கலெக்டர் மற்றும் எம்பி கிறிஸ்டோபர் திலக் ஆகியோரை நேரில் சந்தித்து நன்றியை தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.