வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் என்.எஸ்.எஸ். சிறப்பு முகாம்

0 44
Stalin trichy visit

 திருச்சி , செப். 2 திருச்சி மாவட்டம் லால்குடி அருகே குமுளூர் ஊராட்சியில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் 2026 ம் ஆண்டிற்கான NSS சிறப்பு முகாம் , பல்லபுரம் கிராமத்தில் இன்று தொடங்கியது.

இம்முகாமில் 43 NSS தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.

தொடக்க விழாவில் NSS தன்னார்வலர் திரு.கிசோரம் வரவேற்புரை வழங்கினார்.NSS திட்ட அலுவலர் முனைவர் சி. செந்தில்குமார், முகாமின் நோக்கங்கள் மற்றும் ஒரு வார காலம் நடைபெறவுள்ள பல்வேறு சமூகநலப் பணிகள் குறித்து விளக்கிக் கூறினார்.குமுளூர்
வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வர் முனைவர் ஆர்.லலிதா சிறப்புரையாற்றி, NSS தன்னார்வலர்கள் கிராம மக்களுடன் இணைந்து சமூகநலப் பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபட வேண்டும் என வாழ்த்தினார்.தொடர்ந்து, போதைப்பொருள் இல்லா சமுதாயத்தை உருவாக்கும் நோக்கில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி பல்லபுரம் கிராமத்தில் நடைபெற்றது. பேரணியில் மாணவர்கள் மற்றும் கிராம மக்கள் பங்கு
பெற்றனர். போதைப்பொருள் பயன்பாட்டின் தீமைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டு NSS தன்னார்வலர்களை வாழ்த்தினர். விழாவின் நிறைவில் NSS தன்னார்வலர் செல்வி வினோதினி நன்றியுரை வழங்கினார்.

Leave A Reply

Your email address will not be published.