17 வயது சிறுமி உள்ளிட்ட பெண்கள் மீது PCR வழக்கு – காவல்துறையை கண்டித்து பாமக போராட்டம்
17 வயது சிறுமி உள்ளிட்ட பெண்கள் மீது PCR வழக்கு – காவல்துறையை கண்டித்து பாமக போராட்டம்
திருச்சி திருவெறும்பூர் பகுதியில் கோலம் போடுவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில், 17 வயது சிறுமி உள்ளிட்ட 5 பேர் மீது PCR சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் விவகாரத்தில், காவல்துறையை கண்டித்து பாமக சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
பாமக தெற்கு மாவட்ட செயலாளர் திலீப் குமார் தலைமையில் இன்று ஆட்சியர் அலுவலகம் வந்த சிறுமியின் குடும்பத்தினர், சம்பவத்துடன் தொடர்பில்லாத 17 வயது சிறுமி உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த வழக்கை திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
துவாக்குடி செடிமலை முருகன் கோவில் பகுதியில் பொதுப்பாதை தொடர்பாக நீண்டகாலமாக பிரச்சினை இருந்து வருவதாகவும், கடந்த ஆகஸ்ட் 22-ஆம் தேதி கோலம் போடுவது தொடர்பாக ஏற்பட்ட தகராறு பின்னர் சாதி ரீதியான புகாராக மாறியதாகவும் பாமக தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.
மேலும், உண்மையான பிரச்சினை குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்றும், இரு தரப்பினரின் நியாயத்தையும் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாமக வலியுறுத்தியது.
17 வயது சிறுமி உள்ளிட்டோர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள PCR வழக்கை திரும்பப் பெறாவிட்டால், அடுத்தகட்டமாக தொடர் போராட்டம் நடத்தப்படும் என பாமக சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுவும் அளிக்கப்பட்டது.
பேட்டி