வயது மூத்தவர்களுக்கு பொறுப்புகள் வழங்கப்படும்: முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு பேச்சு

0 17
Stalin trichy visit

திருச்சி, செப்.7  வயது மூத்தவர்களுக்கு கட்சியில் இனி பதவி கிடைக்காத என யாரும் வருத்தப்பட வேண்டாம் அனைவருக்கும் பொறுப்பு வழங்கப்படும் என தலைவர் தெரிவித்துள்ளார் – முன்னாள் அமைச்சர் கே என் நேரு பேச்சு

திமுக என்கிற ஆலமரத்தை யாராலும் அசைத்துப் பார்க்க முடியாது – முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு

திருச்சி திமுக மத்திய, கிழக்கு, வடக்கு, தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் திருச்சியில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் நேற்று (செப்.6)  நடைபெற்றது. திமுக முதன்மை செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும் தெற்கு மாவட்ட செயலாளருமான் அன்பில் மகேஷ், மாவட்ட செயலாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

திமுக மறு சீரமைப்பு பணி தொடர்பாக நடந்த செயற்குழு கூட்டத்தில் திமுக தலைமையிலிருந்து மாவட்ட பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டிள்ள வேலுச்சாமி, வேடச்சந்தூர் சாமிநாதன் முன்னிலையில் இந்த கூட்டம் நடைபெற்றது.

இதில் பேசிய முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ்,

எனக்கு ஒன்று என்றால் நேருவும் அவருக்கு ஒன்று என்றால் நானும் கழகத்திற்கு ஒன்று என்றால் நாங்கள் இருவரும் சேர்ந்து நிற்போம். திமுக என்கிற ஆலமரத்தை யாராலும் அசைத்து பார்க்க முடியாது. நேருவின் தளபதியாக செயல்பட்டு இனி எந்த தேர்தல்கள் வந்தாலும் 100 சதவீதம் வெற்றி பெற செய்ய வேண்டும் என்பதற்காக தான் இந்த கூட்டம்.  என்னையும் நேருவையும் பொன்னர் சங்கர் என  நம்முடைய கழகத் தலைவர்  ஸ்டாலின் கூறுவார்.

ஆளுங்கட்சியாக இருந்தாலும் எதிர்கட்சியாக இருந்தாலும் தொண்டர்களுக்கு திமுக பாதுகாப்பு வளையமாக இருக்கும். நேற்று நேரு வீட்டில் நடந்த சோதனையின் போது நான் அங்கு இருந்தேன். அந்த ஏழு மணி நேரத்தில் நிறைய பாடத்தை கற்று கொண்டேன்.  இனி யார் நிர்வாகிகளாக வந்தாளும் வரும் நிர்வாகிகளுக்கு முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.

திருச்சி கிழக்கு இடை தேர்தல் வரும் போது தேர்தலில் வெற்றி பெற முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.

டார்வின் கோட்பாட்டின்படி ஒரு உயிரினம் வலிமையாக இருப்பதால் மட்டுமே நீண்ட நாள் வாழ்வதில்லை சூழலுக்கு தகுந்தாற் போல் தன்னை தகவமைத்து கொண்டால் தான் நீண்ட நாள் வாழ முடியும். திமுக காலத்துக்கு ஏற்றவாறு தன்னை தகவமைத்து கொண்டதால் தான் இன்னும் இயக்கம் நிலைத்து நிற்கிறது. கட்சியில் ஒருவருக்கொருவர் எந்த்ஃ வித சங்கடங்கள் வரக்கூடாது. நமக்கு எதிராக இருப்பவர்கள் பொய்யர்களாகவே இருக்கிறார்கள் அவர்களை நாம் எதிர்கொள்ள வேண்டும் என்றார்.

அடுத்து பேசிய முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு,

திமுக தலைவராக மு க ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்பு நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் திருச்சி திமுக நூறு சதவீதம் வெற்றியை பெற்றது 2026 சட்டமன்ற தேர்தலில் தான் நாம் ஏழு தொகுதிகளை இழந்துள்ளோம் மீண்டும் அந்த தொகுதிகளை நாம் வெற்றி பெற வேண்டும் அதற்காகத்தான் இந்த கூட்டம். இனி வரும் காலங்களில் நாம் ஒன்றாக இணைந்து செயல்பட்டு வெற்றி பெற வேண்டும் மாநகரத்திற்கு இனி செயலாளர் கிடையாது. பகுதி செயலாளர்கள் மட்டுமே பல மறுசீரமைப்பை தலைமை அறிவித்துள்ளது. அதன்படி செயல்பட வேண்டும் வயது மூத்தவர்களுக்கு இனி பதவி கிடைக்காது என யாரும் வருத்தப்பட வேண்டாம் அனைவருக்கும் பொறுப்புகள் வழங்கப்படும் என தலைவர் தெரிவித்துள்ளார். நீங்கள் இருந்தால்தான் திமுக வெற்றி பெற முடியும் நீங்கள் தான் திமுக.

அனைவரும் ஒற்றுமையாக இருந்து செயல்படுவோம் உங்களுக்காக நான் அனைத்து ஒத்துழைப்பையும் வழங்குவேன் என தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.