திருச்சி அண்ணாமலை நகரில் “விஸ்டீரியா ப்ளூம்” அடுக்குமாடி குடியிருப்புகள் திறப்பு விழா
திருச்சி, செப்.8 திருச்சி அண்ணாமலை நகரில் விஸ்டீரியா ப்ளூம் அடுக்குமாடி குடியிருப்புகள் திறப்பு விழா நடைபெற்றது. ரியல் எஸ்டேட் டெவலப்பர் சாமி குழுமம் சார்பில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளுக்கான சாவிகளை வீட்டு உரிமையாளர்களிடம் தமிழக நீர்வளத் துறை அமைச்சர் ஆனந்த் வழங்கினார்.
5 சொகுசு அடுக்குமாடி குடியிருப்புகளில் 100 வீடுகள் 2 கிளப் ஹவுஸ்கள், சூப்பர் மார்க்கெட், மல்டி பர்ப்பஸ் ஹால், மினி தியேட்டர், 2 பேட்மிட்டன் கோர்ட், நீச்சல் குளம், உடற்பயிற்சி கூடம், யோகா அறை, நடைபயிற்சி தளம், குழந்தைகள் உள் வெளி விளையாட்டுப் பகுதி, கார் பார்க்கிங் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
இரண்டு , மூன்று, நான்கு, படுக்கை அறை வசதிகளுடன் தனித்தனி குடியிருப்பு வீடுகள் இவ்வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
விழாவில் அமைச்சர்கள் ரமேஷ், பர்வேஸ், ராஜ்குமார், எம்எல்ஏக்கள் மணப்பாறை கதிரவன், விக்னேஷ், நவல்பட்டு விஜி, முன்னாள் அமைச்சர்கள் மகேஷ் பொய்யாமொழி, விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன், வாரிய தலைவர் கு.ப. கிருஷ்ணன், தொழிலதிபர் மொராய்ஸ் சிட்டி லெரோன் மொராய்ஸ், திரைப்பட நடிகர் போஸ் வெங்கட், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு பொதுச் செயலாளர் கோவிந்தராஜுலு, கிரடாய் திருச்சி தலைவர் நசுருதீன், சேர்மன் மனோகரன், செயலாளர் முகமது இப்ராஹிம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சாமி குழும நிர்வாக இயக்குனர் இளமுருகன் இயக்குனர் தேன்மொழி திருச்சி அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்க தலைவர் சின்னசாமி மித்ரஜித் சஞ்சித் லக்சா ஆகியோர் வரவேற்றனர்.