விநாயகர் சிலை ஊர்வலத்தில் பட்டாசு வெடிக்க தடை: மாநகர காவல் ஆணையர் அறிவுறுத்தல்

0 18
Stalin trichy visit

திருச்சி, செப். 10 விநாயகர் சிலை ஊர்வலத்தில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டு இருப்பதாக ஆலோசனைக் கூட்டத்தில் மாநகர போலீஸ் கமிஷனர் காமினி அறிவித்தார்.

விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 14-ந்தேதி கொண்டாடப்படுகிறது. திருச்சி நகரில் அன்றைய தினம் முக்கிய இடங்களில் பிரதிஷ்டை செய்யப்படும் விநாயகர் சிலைகள் 3 நாட்கள் வழிபாட்டினை தொடர்ந்து 16-ந்தேதி (புதன்கிழமை) ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு காவேரி ஆற்றில் கரைக்கப்படும்.

விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது பின்பற்றப்பட வேண்டிய விதிமுறைகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நேற்று மாலை திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினி தலைமையில் நடைபெற்றது. மாநகர போலீஸ் துணை கமிஷனர்கள் மணிகண்டன், பனாவத் அரவிந்த் ஆகியோர் விநாயகர் சிலை ஊர்வலத்திற்கான கட்டுப்பாடுகள் தொடர்பாக விளக்கி பேசினார்கள். இதில் Trichy மாநகரின் அனைத்து பகுதிகளிலும் உள்ள விநாயகர் சிலை ஊர்வல அமைப்பு குழு நிர்வாகிகள் மற்றும் இந்து அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

விநாயகர் சிலை அமைப்பு குழுவை சேர்ந்தவர்கள் புதிதாக சிலை அமைப்பதற்கு போலீஸ் நிலையங்களில் அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. நாங்கள் விதிமுறைகளை கடைபிடித்து விநாயகர் சிலை அமைத்து ஊர்வலம் நடத்துவதற்கு அனுமதி வழங்க வேண்டும். வழிபாட்டின் போது கூம்பு வடிவ ஒலிபெருக்கி மற்றும் ஊர்வலத்தின் போது மின் விளக்கு அலங்காரம் செய்வதற்கும் அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்து பேசினார்கள்.

இறுதியாக மாநகர போலீஸ் கமிஷனர் காமினி பேசுகையில் திருச்சி மாநகரில் இருந்து மட்டும் இன்றி திருச்சியாவட்டத்தின் பல பகுதிகள், பெரம்பலூர், சேலம் உள்ளிட்ட பக்கத்து மாவட்டங்களில் இருந்தும் விநாயகர் சிலைகள் இங்கு கொண்டு வரப்பட்டு காவரி ஆற்றில் கரைக்கப்படுகிறது. எனவே சிலை அமைப்பு குழுவினர் விதிமுறைகளை கடைபிடித்து விழா எந்தவித பிரச்சினையும் இன்றி சிறப்பாக முடிவதற்கு ஒத்துழைப்பு தர வேண்டும். ஊர்வலத்தில் பட்டாசு வெடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. காவேரி ஆற்றின் ஒரு பகுதியில் புதிய பாலம் கட்டுமான பணி நடந்து வருவதால் அங்கு சிலைகளை கரைக்க முடியாது. அதற்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் மட்டுமே கரைக்க வேண்டும் என்றார்.

முன்னதாக திருச்சி வருவாய் கோட்டாட்சியர் (ஆர்.டி.ஓ.)சாலை தவளன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பேசிய பா.ஜனதா கட்சியின் ஒ.பி.சி. அணி மாநில துணை தலைவர் அரவணைங்கம் காமராஜ் நகர் முத்துமாரியம்மன் கோவில் இருந்து ஊர்வலமாக எடுத்து செல்லும் விநாயகர் சிலையை ராஜவீதியில் உள்ள 22 தெருக்கள் வழியாக எடுத்து செல்ல அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

Leave A Reply

Your email address will not be published.