விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விமான கட்டணம் உயர்வு

0 16
Stalin trichy visit

திருச்சி, செப்.11 விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விமான கட்டணம் உயர்ந்துள்ளது. மும்பையில் இருந்து திருச்சிக்கு கட்டணமாக ரூ.24,413 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

திருச்சி விமான நிலையத்தில் இருந்து உள்நாட்டு விமான சேீர்களாக சென்னை, பெங்களூரு, ஐதராபாத், மும்பை, புதுடெல்லி உள்ளிட்ட நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இண்டிகோ மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் சார்பில் அந்த விமானங்கள் இயக்கப்படுகின்றன.

வருகிற 14-ந் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. இதனால் விமான கட்டணம் உயர்ந்துள்ளது. ஐதராபாத்தில் இருந்து திருச்சிக்கு விமான கட்டணமாக ரூ.16,891 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதே போன்று மும்பையில் இருந்து திருச்சிக்கு ரூ.24,413 ஆகவும், பெங்களூரில் இருந்து திருச்சிக்கு ரூ.10,249 ஆகவும், சென்னையில் இருந்து திருச்சிக்கு ரூ.8,278 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதுவே சாதாரண நாட்களில் கட்டணம் ஐதராபாத்-திருச்சிக்கு ரூ.6,371, மும்பை-திருச்சிக்கு ரூ.7,032, பெங்களூரு-திருச்சிக்கு ரூ.4,543, சென்னை-திருச்சிக்கு ரூ.5,066 ஆக இருந்து வருகிறது. தற்போது விமான கட்டணம் உயர்ந்துள்ளதால், பயணிகள் அதிக கட்டணம் கொடுத்து பயணம் செய்யும் நிலை இருந்து வருகிறது.

விமானங்கள் ரத்து; பயணிகள் அவதி
திருச்சி விமான நிலையத்தில் இருந்து அபுதாபிக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் விமானங்களை இயக்கி வருகிறது. அதன்படி நேற்று மாலை 6.20 மணிக்கு புறப்பட வேண்டிய விமான சேவை ரத்து செய்யப்படுவதாக விமான நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதேபோன்று இண்டிகோ நிறுவனத்தின் சார்பில் சென்னையில் இருந்து திருச்சிக்கு மாலை 4.15 மணிக்கு வந்து, மீண்டும் 4.45 மணிக்கு திருச்சியில் இருந்து சென்னை நோக்கி புறப்பட்டு செல்லும் விமானத்தின் சேவையும் ரத்து செய்யப்படுவதாக விமான நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. தொழில்நுட்ப காரணங்களுக்காக இரு விமான சேவையும் ரத்து செய்யப்படுவதாக விமான நிறுவனங்களின் சார்பில் அறிவிக்கப்பட்டன. இதேபோன்று திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு மதியம் 1.25 மணிக்கு புறப்பட வேண்டிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் விமானம், இரவு 8.45 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்பட்டது. இதனால் பயணிகள் அவதிக்கு உள்ளாகினர்.

Leave A Reply

Your email address will not be published.