வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை: திருச்சியில் அமைச்சர் ஷாஜகான் பேட்டி

0 7
Stalin trichy visit

திருச்சி, செப். 12  வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம் – அமைச்சர் ஷாஜகான் திருச்சியில் பேட்டி.

திருச்சி காஜாமலையில் உள்ள ராஜியா அரபிக் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக வருகை புரிந்த அமைச்சர் ஷாஜகான், முன்னதாக செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

புதிய ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் சிறப்பான நிதிநிலை கூட்டத்தொடர் நிறைவடைந்துள்ளது. நிதிநிலை கூட்டத்தொடர் முடிந்ததைத் தொடர்ந்து அமைச்சர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை நிறைவேற்றும் வகையில் மாவட்ட வாரியாக ஆய்வுக் கூட்டங்களை நடத்தி வருகின்றனர்.

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் பேரிடர் மேலாண்மை அமைச்சர் தலைமையில் மாவட்ட வாரியாக ஆய்வுக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. நேற்று நாகப்பட்டினம் மாவட்டத்திலும், இன்று தஞ்சாவூர் மாவட்டத்திலும் ஆய்வுக் கூட்டங்கள் நடைபெற்றுள்ளன. பருவமழையின்போது பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கரூர் விவகாரம் தொடர்பாக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்ற கருத்து குறித்து கேட்டபோது, அது விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தெரிவித்த கருத்து என்றார்.

கரூர் சம்பவம் தொடர்பாக அன்றைய ஆட்சியாளர்கள் ஆய்வு செய்து, தேவையான வழக்குகள் பதிவு செய்துள்ளனர். எனவே, அதற்கு மேல் தற்போது அதுகுறித்து பேசவோ அல்லது கூடுதல் வழக்குகள் பதிவு செய்ய வேண்டும் என கூறவோ தேவையில்லை என்றார்.

தொகுதிப் பங்கீட்டில் கூட்டணி கட்சிகளை திமுக அரவணைக்கவில்லை என்ற விமர்சனம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், நீண்ட காலமாக திமுக தலைமையிலான கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் பயணித்து வருகிறது.

2016-ம் ஆண்டு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 5 தொகுதிகளிலும், 2021-ம் ஆண்டு 3 தொகுதிகளிலும் போட்டியிட்டது. 2026-ம் ஆண்டு தொகுதிகளின் எண்ணிக்கை குறைந்ததால் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கு சில மனவருத்தங்கள் இருந்தன.

இருப்பினும், மதச்சார்பற்ற சக்திகளின் ஆட்சி அமைய வேண்டும் என்ற அடிப்படையில் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட்டதாக தெரிவித்தார்.

தற்போதைய ஆட்சி 120 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் நிலையில், லஞ்சம், ஊழல் இல்லாத ஆட்சியாகவும், மதச்சார்பற்ற ஆட்சியாகவும், சமூக நீதியை நிலைநாட்டும் ஆட்சியாகவும், சமத்துவத்தைப் பேணும் ஆட்சியாகவும் செயல்பட்டு வருகிறது.

இதனால் கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் மகிழ்ச்சியுடன் ஆட்சிக்கு துணை நிற்க்கின்றனர்.

கொங்கு மண்டலத்தில் கடந்த தேர்தலில் உள்ள 58 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் 29 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளதாகவும், தற்போது நடைபெற உள்ள இரண்டு தொகுதிகளிலும் கூட்டணி பலத்துடன் தமிழக வெற்றிக் கழகம் நிச்சயம் வெற்றி பெறும் .

இடதுசாரிகள் இடைத்தேர்தலில் ஆதரவு அளிப்பார்களா என்ற கேள்விக்கு, கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆட்சிக்கு வெளியிலிருந்து நிபந்தனையற்ற ஆதரவை வழங்கி வருகின்றனர்.

வரவிருக்கும் இடைத்தேர்தலிலும் அவர்கள் ஆதரவு அளிப்பார்கள் என நம்பிக்கை உள்ளது.

புதிய திட்டங்கள் கொண்டு வரும்போது எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடமிருந்து எதிர்ப்புகள் வருவது இயல்புதான் .

கணினி அறிமுகப்படுத்தப்பட்டபோதும் “ஏன் கணினி?” என கேள்வி எழுப்பினர். JCB இயந்திரம் வந்தபோதும் இதுபோன்ற எதிர்ப்புகள் எழுந்தன .

சென்னையில் தலைமைச் செயலகம் அமைப்பது தொடர்பாக பல்வேறு கருத்துகள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா காலத்திலும் ராணி மேரி கல்லூரி பகுதியில் தலைமைச் செயலகம் அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும், பின்னர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆட்சியில் ஓமந்தூரார் தோட்டத்தில் தலைமைச் செயலகம் அமைக்கப்பட்டபோதும் எதிர்ப்புகள் இருந்தன.

தலைமைச் செயலகம் அவசியமானது என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. தற்போதைய இடத்தில் மக்கள் அதிகளவில் வந்து செல்லும் நிலையில் இடநெருக்கடி உள்ளிட்ட பல்வேறு சிரமங்கள் உள்ளன .

தலைமைச் செயலகம் சென்னையில்தான் அமையும். எந்தப் பகுதியில் அமைப்பது என்பது குறித்து முதலமைச்சர் ஆய்வு செய்து முடிவு செய்வார். மீனவர்கள் உள்ளிட்ட எந்தத் தரப்பினருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் உரிய முடிவு எடுக்கப்படும் .

ஒன்றிய பாஜக அரசின் கைப்பாவையாக ஆளுநர் ஆட்சி வந்துவிடக்கூடாது என்ற ஒரே காரணத்திற்காக ஆதரவு அளித்தோம்.

கடந்த 120 நாட்களுக்கும் மேலாக முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளுடன் பழகவும், பல்வேறு ஆய்வுக் கூட்டங்களில் பங்கேற்கவும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

இதுவரை இல்லாத அளவுக்கு சிறப்பான மற்றும் நட்பு ரீதியான அணுகுமுறை இருப்பதாகவும், அனைத்து மக்களின் குரலுக்கும், அனைத்து கட்சிகளின் கருத்துகளுக்கும் செவி சாய்க்கக்கூடிய தலைமையாக முதலமைச்சர் செயல்பட்டு வருவதாகவும் அமைச்சர் ஷாஜகான் தெரிவித்தார்.

இதன் காரணமாக தற்போது கூட்டணியில் இணைந்துள்ள அனைத்து கட்சிகளும் மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கிறோம் என்றார்.

Leave A Reply

Your email address will not be published.