திருச்சியில் லஞ்ச ஒழிப்பு துறை சூப்பிரண்டு உள்பட 2 போலீஸ் அதிகாரிகள் திடீர் பணியிட மாற்றம்: டி.ஜி.பி. அதிரடி நடவடிக்கை
திருச்சி, செப். 12 திருச்சியில் லஞ்ச ஒழிப்பு துறை சூப்பிரண்டு உள்பட 2 போலீஸ் அதிகாரிகள் திடீர் பணியிட மாற்றம்: டி.ஜி.பி. அதிரடி நடவடிக்கை
திருச்சி மாநகர காவல் துறை நுண்ணறிவுப் பிரிவு (ஐ.எஸ்.) உதவி போலீஸ் கமிஷனராக இருந்தவர் ஸ்ரீதர். இவர் திடீரென கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதேபோல திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டாக இருந்த மணிகண்டன் என்பவர்கள் கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு போலீஸ் டி.ஜி.பி. மகேஷ்குமார் அகர்வால் இதற்கான உத்தரவினை பிறப்பித்து உள்ளார்.
தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடு மற்றும் தொடர்புடைய 30 இடங்களில் கடந்த சனிக்கிழமை துணை சூப்பிரண்டு மணிகண்டன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
இந்த சோதனையின் போது 241 முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இந்த சோதனை முடிந்த 4 நாட்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டும், மாநகர நுண்ணறிவுப் பிரிவு போலீஸ் உதவி கமிஷனரும் திடீரென அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டு இருப்பது போலீஸ் அதிகாரிகள் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.