விநாயகர் சிலைகளை கரைக்கும் காவிரி பாலத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

0 18
Stalin trichy visit

திருச்சி, செப்.13: திருச்சி மாநகரில் விநாயகர் சிலைகளை கரைக்கும் செய்யும் காவிரிப் பாலத்தில் முன்னேற்பாடுகளை ஆட்சியர் பிரத் திக் தாயள் அண்மையில் ஆய்வு செய்தார்.

திருச்சி மாவட்டத்தில் பிரதிஷ்டை செய்யப்படும் பெரிய அளவி லான விநாயகர் சிலைகளின் பெரும்பகுதி திருச்சி காவிரியாற்றில் கரைக்கப்படும். குறிப்பாக சிந்தாமணி காவிரிப் பாலத்தில் இருந்து கிரேன்கள் உதவியுடன் காவிரியாற்றில் சிலைகளைக் கரைப்பது வழக்கம். இந்தாண்டு விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்துக்காக செப்.16, 17 ஆகிய தேதிகளில் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது. இந்நிலை யில் சிலைகளைக் கரைக்கும் பகுதியில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல்துறை மற்றும் வருவாய்த் துறை அலுவலர்களுடன் ஆட்சியர் பிரத்திக் தாயள்  ஆலோசனை நடத்தினார்.

ஆய்வின்போது ஸ்ரீரங்கம் வருவாய்க் கோட்டாட்சியர் க. தமிழ் மணி, ஸ்ரீரங்கம் மாநகராட்சி உதவி ஆணையர் அ. முத்துமுருகேசன் பாண்டியன், உதவி காவல் ஆணையர் (போக்குவரத்து) சீதாராமன், வருவாய் வட்டாட்சியர்கள் செல்வகணேஷ் (ஸ்ரீரங்கம்) சேக் முஜிப் (திருச்சி கிழக்கு) ஆகியோர் உடனிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.