திருச்சி ரயில் நிலையத்தில் புகையிலை பொருட்கள் பறிமுதல்
திருச்சி, செப். 14 திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் நேற்று இரவு புதுடெல்லி ஹஜ்ரத் நிஜாமுதினில் இருந்து கன்னியாகுமரி வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் நடைமேடை எண் 4-ல் வந்து நின்றது. அப்போது திருச்சி ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு ஆதர்ஸ் பச்சோரா உத்தரவின்படி, சிறப்பு உதவி ஆய்வாளர் சுப்பிரமணியன், போலீஸ்காரர்கள் கண்ணதாசன் மற்றும் ரெங்க பாஷ்யம், ராஜ்குமார் ஆகியோர் ரெயிலில் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது பொதுப்பெட்டியின் இருக்கைக்கு அடியில் 3 தோல் பைகளும், பின்புறம் உள்ள பொது பயணிகள் பெட்டியில் 2 சாக்குப்பைகளும் கேட்பாரற்று கிடந்தன. அவற்றை திறந்து பார்த்தபோது, அதில் சுமார் 37 கிலோ 100 கிராம் புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்