மரம் தங்கசாமி நினைவு நாளில் காவேரி கூக்குரல் 1 லட்சத்து 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு

0 21
Stalin trichy visit

திருச்சி, செப். 18  மரம் தங்கசாமி நினைவு நாளில் காவேரி கூக்குரல் 1 லட்சத்து 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு

மர ஆர்வலரான தங்கசாமி ஐயாவின் நினைவு நாளை முன்னிட்டு காவேரி கூக்குரல் மூலம் தமிழகம் முழுவதும் 1,10,000 க்கும் மேற்பட்ட டிம்பர் மரக்கன்றுகள் நடப்பட்டன.

மரம் தங்கசாமி அவர்களின் நினைவு நாளான செப்டம்பர் 16 அன்று மரங்கள் நடுவதை விவசாயிகள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் டிம்பர் மரங்கள் சாகுபடி செய்வதில் விவசாயிகளுக்கு முன்னோடியாக திகழ்ந்தவர் மரம் தங்கசாமி ஐயா, தனது வாழ்நாள் முழுவதும் டிம்பர் மர சாகுபடியை பிரபலப்படுத்தியவர். மரம் சார்ந்த விவசாயம் காலத்தின் கட்டாயம் என விவசாயிகளுக்கு எடுத்துக்கூறி எண்ணற்ற விவசாயிகளை மரம் சார்ந்த விவசாயத்திற்கு மாற்றியவர். ஈஷாவின் ஆரம்பகால இயக்கமான பசுமைக் கரங்கள் திட்டத்துடன் இணைந்து பலகாலமாக செயல்புரிந்தவர்.

அவரது நினைவு நாளை சிறப்பிக்கும் வகையில் காவேரி கூக்குரல் மூலமாக தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் உள்ள 111 விவசாய நிலங்களில், 497 ஏக்கர் நிலப்பரப்பில் மொத்தம் 1,10, 906 டிம்பர் மரக்கன்றுகள் நடப்பட்டன.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டம் மகிழம்பாடி கிராமத்தில் சுப்பிரமணியன் அவர்கள் தோட்டத்தில் 1000 மரக்கன்று நடவு செய்ய பட்டது

தமிழகம் முழுவதும் உள்ள ஈஷா நாற்றுப்பண்ணைகளில் விவசாயிகளுக்கு 5 ரூபாய்க்கு டிம்பர் மரக்கன்றுகள் வழங்கப்படுகின்றன. மரக்கன்றுகளைப் பெறவும், மண்ணுக்கேற்ற மரங்கள் குறித்த ஆலோசனைகள் பெறவும், காவேரி கூக்குரல் மூலம் நடத்தப்படும் பயிற்சிகளில் பங்கேற்கவும் 80009 80009 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Leave A Reply

Your email address will not be published.