பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய கோரி 3வது நாளாக விவசாயிகள் கொட்டும் மழையில் கும்மி அடித்து போராட்டம்
திருச்சி, செப். 18 முழு பயிர் கடன்களை தள்ளுபடி செய்திடக்கோரி 3 வது நாளாக விவசாயிகள் கொட்டும் மழையில் கும்மி அடித்து போராட்டம்
தமிழக முதலமைச்சர் ஜோசப்விஜய் தேர்தல் காலத்தில் அறிவித்தபடி முழு பயிர் கடன்களை தள்ளுபடி செய்த வலியுறுத்தி, திருச்சி சமயபுரம் அருகே 50 விவசாய சங்கத்தினர் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஈசன் முருகசாமி தலைமையில் தொடர் காத்திருக்கு போராட்டத்தை தொடங்கினர்
விவசாயிக்கு சொந்தமான பட்டா நிலத்தில் தொடர்போராட்டம் நடத்திடவும் திருச்சி மாவட்ட காவல்துறை அனுமதி அளிக்காமல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டால் கைதுசெய்வோம் என்று எச்சரித்தபோதும், காவல்துறை எச்சரிக்கையை மீறி 350க்கும் மேற்பட்ட விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதையடுத்து அமைச்சர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி அதில் உடன்பாடு எட்டப்படாததால் மீண்டும் போராட்டத்தை தொடங்கிய விவசாயிகள், நேற்று மூன்றாவது நாளாக இரவு கன மழையிலும் கும்மி அடித்து தங்களது போராட்டத்தை தொடர்ந்தனர்.