இடி, மின்னலுடன் பலத்த மழை : துறையூரில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது

0 14
Stalin trichy visit

திருச்சி, செப். 18 திருச்சியில் கடந்தசிலநாட் களாகவே கோடை காலத்தை போல் வெயிலின் தாக்கம் இருந்து வருகிறது. இரவிலும் மக்கள் கடும் புழுக்கத்தால் தவித்து வந்தனர். நேற்றும் பகல் பொழுதில் வழக்கம் போல் வெயில் சுட்டெரித் தது. மாலை 6 மணிக்கு மேல் வானில் கருமேகங்கள் திரண் டன. பின்னர் இரவு 7 மணி அளவில் இடி, மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு நள்ளிரவுக்கு மேல் பெய்த மழையின்போது, பலத்த சத்தத்துடன் இடி, இடித்தது. இதேபோல் நேற் றும் இடி சத்தம் அதிகமாக இருந்தது. மேலும், இந்தமழை யால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. தொடர்ச் சியாக வெப்பத்தின் தாக்கத் தால் தவித்து வந்த மக்களுக்கு திருச்சியில் பெய்த மழை சற்று ஆறுதலை தந்தது. மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி யான சூழல் நிலவியது.

துறையூர் பகுதியில் நள்ளிரவு திடீ ரெனபலத்தமழை கொட்டித் தீர்த்தது. இதனால் மழைநீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. துறையூர்-திருச்சி சாலையில் முசிறி பிரிவு ரோடு, போலீஸ் நிலையம், அண்ணா பஸ் நிலையம் மற் றும் பாலக்கரை உள்பட பல் வேறு பகுதிகளில் ஒரு அடிக் கும்மேலாகதண்ணீர் தேங்கி நின்றது. இதனால் நேற்று மாணவ,மாணவிகள், பொது மக்கள் சாலையில் செல்ல முடியாமல் பெரிதும் அவ திக்கு உள்ளாகினர்.

மேலும் குட்டகரை ஓம் சக்தி கோவில் பகுதியில் வீடு களுக்குள் மழைநீர் புகுந்தது. மேலும் குடியிருப்பு பகுதியை மழைநீர் சூழ்ந்ததால் நள்ளிர வில் பொதுமக்கள் கடும் சிர மத்திற்கு உள்ளாகினர். இது குறித்து தகவல் அறிந்த துறை யூர் தீயணைப்பு மற்றும் மீட் புப் படையினர் உடனடி யாக சம்பவ இடத்திற்கு சென்று, மோட்டார் மூலம் வீடுகளில் தேங்கியிருந்த மழைநீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். மழையால் துறையூர் நகரின் பல்வேறு பகுதிகளிலும் மின் தடை ஏற்பட்டது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. குறிப்பாக துறையூரில் 90 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாகமாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தொட்டியம் மற்றும் காட் டுப்புத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மழைபெய் தது. இதனால் வெப்பம். தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. இந்த மழை பொதுமக்கள் மற்றும் விவசா யிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்ப டுத்தியது. இப்பகுதியில் நெல், வாழை, வெற்றிலை உள் ளிட்ட பல்வேறு பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள் ளன. தற்போது பெய்துள்ள மழையால் வயல்களுக்கும், தோட்டங்களுக்கும் தேவை யான ஈரப்பதம் கிடைத்துள்ள தால் பயிர்களின் வளர்ச்சிக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று விவசாயிகள் தெரிவித் தனர்.

தா.பேட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளிலும் நேற்று மாலைசுமார் ஒருமணி நேரத் திற்கும் மேலாக இடி, மின்ன லுடன் பரவலாக ம தது. இந்த மழையினால் லாக மழை பெய் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழையால் கடந்த சில நாட்களாக நிலவி வந்தவெப் பம் தணிந்து, குளிர்ந்த சூழல் நிலவியது.

Leave A Reply

Your email address will not be published.