சொத்து தகராறில் தந்தையை வெட்டிக் கொன்ற மகன் கைது

0 10
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், துறை யூர் அருகே உள்ள கோட்டத் \தூர் அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் கணேசன் (வயது 70). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி பாப்பாத்தி. இவர்களுக்கு மணி (48), சரவணன் (47), மனோகர் (45) என 3 மகன்களும், ரேவதி (43) என்ற மகளும் உள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி, அவரவர் குடும்பத்துடன்  வசித்து வருகின்றனர்.

பாப்பாத்தி கடந்த ஆண்டு இறந்துவிட்ட நிலையில் கணேசன் தனியாக வசித்து வந்தார். கடந்த சில நாட்க ளுக்கு முன்பு கணேசன், 60 சென்ட் நிலத்தை விற்பனை செய்து பணத்தை பெற்றுள் ளார். இதில் கிடைத்த முழு தொகையையும் கேட்டு மணி அடிக்கடி கணேசனிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக நேற்று முன்தினம் இரவு மணிக்கும், கணேசனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, பின்னர் கைகலப்பாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த மணி அருகே இருந்த அரிவாளை எடுத்து கணேசனின் பின்னந் தலையில் வெட்டியுள்ளார். இதில் கணேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் மணியைப் பிடித்து துறையூர் போலீசில் ஒப்படைத்த னர். மேலும் போலீசார், சம் பவ இடத்திற்கு சென்று கணேசனின் உடலை கைப் பற்றி பிரேத பரிசோதனைக் காகதுறையூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக கணேசனின் மற்றொரு மகனான சரவணன் அளித்த புகாரின்பேரில், போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து மணியை கைது செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். சம்பவம் அப்பகுதியில் துறையூர் அருகே சொத்து தகராறில் தொழிலாளியை மகனே வெட்டிக்கொன்ற பெரும் பரபரப்பை ஏற்ப டுத்தி உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.