துறையூர் அருகே கோவில்களின் பூட்டை உடைத்து நகைகள் – உண்டியல்கள் திருட்டு

0 15
Stalin trichy visit

திருச்சி, செப். 18 திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள காளிப்பட்டி தெற்கு தெருவில் முத் து மாரியம்மன் இக்கோவிலில் அதே தெருவைச் சேர்ந்த கலியபெருமாள் (வயது 55) என்பவர் பூசாரியாக இருந்து வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு கலிய பெருமாள் வழக்கம்போல் கோவிலை பூட்டிவிட்டு, விநாயகர் சதுர்த்தியையொட்டி வைக்கப்பட்டிருந்த சிலையை  கரைப்பதற்காக கிராம  மக்களுடன் சென்றார்.  பின்னர் நள்ளிரவில் ஊர் திரும்பிய கலியபெரு மாள் கோவிலுக்கு சென்று பார்த்தபோது, கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டிருந் ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து உள்ளே சென்று பார்த்த போது அம்மன் கழுத்தில் அணிவிக்கப்பட்டிருந்த சுமார் 2 பவுன் தாலி மற்றும் உண்டியலை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந் தது. இது குறித்து அவர் துறையூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் அங்கு சென்ற போலீசார், இந்த சம்பவம் விசாரணை மேற்கொண்டு வம் குறித்து வருகின்றனர்.

இதேபோல் சிங்களாந்தபு ரம் ஊராட்சிக்கு உட்பட்ட தெற்கியூர் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலுக்குள் நேற்று முன்தினம் இரவு புகுந்த புகுந்த மர்ம நபர்கள், T.பூட்டை பூட்டை உடைத்து அம்மன் கழுத்தில் அணிவிக்கப்பட்டி சுமார் 5பவுன் தாலி, டிருந்த தங்க காசுமற்றும் உண்டியலை திருடிச்சென்றுள்ளனர். பின்னர் அந்த உண்டியலை கோவிலின் அருகே உள்ள விவசாய நிலத்தில் வைத்து, அதனுடைய பூட்டை உடைத்து   உள்ளே இருந்த பணத்தை திருடி சென்றுள்ளனர். இது பற்றி தகவல் அறிந்த கிராம மக்கள் உடனடியாகது றையூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.அதன்பேரில் அங்கு சென்ற துறையூர் போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

கோவில்களில் திருட்டுபோன நகைகளின் மதிப்பு ரூ.7 லட்சம்  என்று கூறப்படுகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப ரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.