குடிநீர் கலங்கலாக வருவதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

0 14
Stalin trichy visit

திருச்சி, செப்.19 திருச்சி மாவட்டம், முசிறி அருகே செவ்வந்திலிங்கபுரம் கிராமத்தில் கடந்த 5 மாதங்களாக குடிநீர் கலங்கலாக வருகிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை அறிவுறுத்தியும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி செவ்வந்திலிங்கபுரம் கிராம மக்கள் நேற்று திருச்சி-நாமக்கல் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராமம்) ஜாபர், துணை போலீஸ் சூப்பிரண்டு சச்சிதானந்தம், சப்-இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்ததை தொடர்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.