திருச்சி விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டலை எதிர்கொள்வது குறித்து ஒத்திகை
திருச்சி, செப்.19 திருச்சி விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டலை எதிர்கொள்வது குறித்து ஒத்திகை
விமானம் மற்றும் முனையக் கட்டிடத்திற்கு விடுக்கப்படும் வெடிகுண்டு மிரட்டலை எதிர்கொள்வது தொடர்பாக திருச்சி விமான நிலையத்தில் ஒத்திகை நடைபெற்றது. இந்த ஒத்திகையில் இந்திய விமான நிலைய ஆணையம், மத்திய தொழில் பாதுகாப்பு படை, விமான போக்குவரத்து சேவைகள், விமான நிறுவன பிரதிநிதிகள், உளவுத்துறை விமான நிலையக் காவல் துறை, வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் அகற்றுதல் பிரிவு, சுங்கத்துறை, குடிவரவுத் துறை மற்றும் பிற பங்குதாரர் முகமைகள் பங்கேற்றன.
விமானம் தொடர்பான இந்த ஒத்திகையின் போது, பங்கேற்ற முகமைகள் தங்களுக்கு இடையேயான தகவல் தொடர்பு, மிரட்டல் மதிப்பீடு, ஒருங்கிணைப்பு, விமானப் பாதுகாப்பு மற்றும் தேடுதல் செயல்பாடுகளுக்கான தங்களது நடைமுறைகளை செய்து காண்பித்தன. முனையக் கட்டிடத்தில் குண்டு மிரட்டல் இருப்பது போன்ற சூழல் உருவாக்கப்பட்டு, பின்னர் அங்கிருந்த பயணிகள் மற்றும் ஊழியர்கள் பாதுகாப்பாக நியமிக்கப்பட்ட அசெம்பிளி பகுதிகளுக்கு ஒழுங்குமுறையுடன் வெளியேற்றப்பட்டனர்.
இந்த வெளியேற்றம் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் மற்றும் விமான நிலையப் பங்குதாரர்கள் பங்கேற்றனர்.