திருச்சி அரசு மருத்துவமனையில் 60 படுக்கை வசதியுடன் கூடிய டெங்கு வார்டுகள் தயார்
திருச்சி, செப்.19 திருச்சி அரசு மருத்துவமனையில் 60 படுக்கை வசதியுடன் கூடிய டெங்கு வார்டுகள் தயார்
தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டில் 15,688 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டதில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த ஆண்டில் கடந்த 16-ந்தேதி வரை 16,334 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 9 பேர் உயிரிழந்துள்ளனர். இதில், சென்னை, கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம் ஆகிய மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகமாக கண்டறியப்பட்டுள்ளது. திருச்சியில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதையடுத்து திருச்சி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக, டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏ.டி.எஸ். வகை கொசு மற்றும் அதன் புழுக்களை கண்டறிந்து அழிக்கும் பணியை தீவிரமாக மேற்கொண்டுள்ளனர். ஊரக மற்றும் மாநகராட்சி பகுதியிலும் தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த 9 மாதங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் டெங்குவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மாவட்டத்தில் இந்த மாதம் டெங்குவால் யாரும் பாதிக்கப்படவில்லை. ஆனால் மாநகரில் 2 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே நாளுக்கு நாள் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதால், திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலுக்கு சிறப்பு வார்டுகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. திருச்சி அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள
அதன்படி, திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் பெரியவர்களுக்கும், குழந்தைகளுக்கும் தலா 20 படுக்கை வசதியுடன் கூடிய தனி வார்டு மற்றும் கர்ப்பிணிகள், தாய்மார்கள் மற்றும் அவசர சிகிச்சை நோயாளிகளுக்கு தலா 10 படுக்கை வசதியுடன் கூடிய வார்டு என்று மொத்தம் 60 படுக்கை வசதியுடன் கூடிய வார்டுகள் தயார் செய்யப்பட்டுள்ளன. குழந்தைகளுக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறவேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.