கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடிய 2 பேர் கைது

0 14
Stalin trichy visit

திருச்சி, செப்.19 திருச்சி மாவட்டம்,  மண்ணச்சநல்லூர் அருகே உள்ள இனாம்கல்பாளையத்தில் உள்ள நல்லேந்திரசாமி கோவிலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உண்டியலை உடைத்து காணிக்கை பணத்தை மர்மநநபர்கள் திருடி சென்றுவிட்டனர். இது குறித்த புகாரின் பேரில் மண்ணச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உண்டியலை உடைத்து பணம் திருடியதாக மண்ணச்சநல்லூர் மேல செட்டி தெருவை சேர்ந்த குமார் மகன் கவுதம் (வயது 19), மண்ணச்சநல்லூர் தெற்கு ஏரிமிஷன் தெருவை சேர்ந்த ரங்கசாமி மகன் ஆகாஷ்ராஜா (23) ஆகியோரை நேற்று கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து ரூ.500 கைப்பற்றப்பட்டது. மேலும் திருநகர் பகுதியை சேர்ந்த சரவணன் மகன் அமர்நாத் (25) என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.