கழிவுநீர் வடிகால் அமைக்கும் பணியை விரைவுபடுத்த கோரி பொதுமக்கள் மறியல்

0 13
Stalin trichy visit

திருச்சி, செப்.19  மணப்பாறையில் உள்ள விராலிமலை சாலையில் சாலையோர மரங்கள் அகற்றப்பட்டு கழிவுநீர் செல்லக்கூடிய வடிகால்வாய் அமைக்கும் பணி கடந்த சில மாதங்களாக நடந்து வருகிறது. இந்த பணி மந்தமாக நடைபெற்று வருவதால் ஆங்காங்கே கழிவுநீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி அப்பகுதி மக்கள் கொசு தொல்லையால் அவதிப்பட்டு வந்துள்ளனர்.

தற்போது டெங்கு, மலேரியா, வைரஸ் உள்ளிட்ட காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. எனவே வடிகால்வாய் அமைக்கும் பணியை விரைவுபடுத்த வேண்டும் என நெடுஞ்சாலைத்துறை மற்றும் ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில் நேற்று சாலை விரிவாக்க பணியை ஆய்வு செய்ய வந்த சாலை ஆய்வாளரிடம் தேங்கியுள்ள கழிவுநீரை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க அப்பகுதியினர் வலியுறுத்தினர். இந்நிலையில் அவர்களின் கோரிக்கையை ஆண்டுகொள்ளவில்லை என கூறிவடகலட்சுமிபுரம் பகுதியினர் சாலையின் குறுக்கே மரங்களை போட்டு மறியலில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மணப்பாறைபோலீசார்மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதேபோல் மணப்பாறை அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமியை சித்தானத்தம் பகுதியை சேர்ந்த 19 வயது வாலிபர் கடத்தி சென்று திருமணம் செய்து கொண்டதாகவும், சிறுமியுடன்வந்தவாலிபரை போலீசார் விட்டு விட்டதாகவும் தெரிகிறது. இந்நிலையில் அந்த வாலிபரை கைது செய்யக்கோரி சிறுமியின் உறவினர்கள் மணப்பாறை போலீஸ் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் நடவடிக்கை எடுப்பதாக கூறியதை அடுத்து மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.