உலக இருதய தினத்தை முன்னிட்டு காவேரி மருத்துவமனை சார்பில் மாரத்தான் ஓட்டம்
திருச்சி, செப்.28 உலக இருதய தினத்தை முன்னிட்டு இதயத்தை பேணி காக்க வலியுறுத்தி விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் – 6500க்கும் மேற்பட்டோர் பங்கேற்று ஓடினார்கள்
நாடு முழுவதும் இன்றைய பரபரப்பான கணினி யுகத்தில், இருதய நோயால் பாதிக்கப்படுபவர் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது, ஆண்டுதோறும் 18.6 மில்லியன் மக்கள் இருதயநோயால் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. புகைப்பிடித்தல், மதுப்பழக்கம் உள்ளிட்டவைகளை தவிர்த்தால் இதய நோய் உள்ளிட்ட எந்தவித நோய் தாக்கத்தில் இருந்தும் தற்காத்துக் கொள்ளலாம். முறையான உணவு பழக்கம், உடற்பயிற்சி, மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கை முறையே இருதய நோயிலிருந்து தற்காத்துக் கொள்ள அவசியம்.
இருதயத்தை பேணிக்காப்பது அவசியம் என்ற நோக்கில் இதயம் காப்போம் என்ற மைய கருத்தை வலியுறுத்தும் வகையில் காவேரி மருத்துவமனை குழுமம் சார்பில் மாபெரும் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது
ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு மையக்கருத்தை முன்வைத்து மாரத்தான் ஓட்டங்கள் நடத்தப்படும் நிலையில், 11-வது ஆண்டாக நடத்தப்பட்ட இந்த இதயத்தை பேணிக்காப்போம் என்ற கருத்தை வலியுறுத்தி 21கிமீ, 10 கி.மீ, 5 கிமீ ஆகிய மூன்று பிரிவுகளில் மாரத்தான் போட்டிகள் நடத்தப்பட்டது
இதில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை 6500க்கும் மேற்பட்டோர் பங்கேற்று ஓடினார்கள், இதயத்தை பேணி காக்க தினசரி 5 கிலோமீட்டர் நடைபயிற்சி அவசியம் என மருத்துவர்கள் வலியுறுத்தும் நிலையில், இதயத்தை பேணிக்காக்க அனைவரும் முன்வரவேண்டும் எனவும் இந்த விழிப்புணர்வு மாரத்தான் போட்டி வாயிலாக பொதுமக்களை வலியுறுத்தி கேட்டுக்கொண்டனர்
வெற்றி பெற்றவர்களுக்கு மூன்று லட்சம் ரூபாய் வரையிலான ரொக்கம் பகிர்ந்து அளிக்கப்பட்டது, முன்னதாக 10 கிமீ மாரத்தான் போட்டியை மத்திய மண்டல காவல்துறை ஐஜி பாலகிருஷ்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்து ஓடினார், ஐந்து கிலோ மீட்டர் மாரத்தான் போட்டியை மாவட்ட வன அலுவலர் கிருத்திகா கொடிய சேர்த்து தொடங்கி வைத்தார்.