டெங்கு கொசு ஒழிப்பு பணி : தேசிய சுகாதார திட்ட இயக்குநர், மாநகராட்சி ஆணையர் ஆய்வு

0 23
Stalin trichy visit

திருச்சி, செப்.28  திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகளை   தேசிய சுகாதார திட்ட இயக்குநர்  டாக்டர் அணிஷ் சேகர் , ஆணையர் நே. பொன்மணி ஆகியோர் ஆய்வு செய்தனர்.

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மண்டல எண் 4, வார்டு எண்கள் 52 மற்றும் 65 பட்டத்தம்மாள் தெரு, ராஜராஜேஸ்வரி நகர் மற்றும் மார்சிங் பேட்டை காவலர் குடியிருப்பு ஆகிய பகுதிகளில் தேசிய சுகாதார திட்ட இயக்குநர் டாக்டர் அணிஷ்சேகர்இ.ஆ.ப., ஆணையர் நே. பொன்மணி ஆகியோர் டெங்கு கொசு ஒழிப்பு பணி ஆய்வு செய்தார்கள்.

மாநகராட்சி ஆணையர் தெரிவித்ததாவது, திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பகுதி முழுவதும் டெங்கு விழிப்புணர்வு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது, வீடுகளை ஆய்வு செய்தபொழுது திறந்த நிலையில் உள்ள தூய தண்ணீர் சேமித்து வைக்கப்பட்ட கலன்கள்,தொட்டிகள், டயர்கள், காலி டப்பாக்கள் ஆகியவற்றில் உள்ள சிறிதளவு தண்ணீரில் டெங்கு கொசு உற்பத்தியாகும் லார்வா கண்டறியப்பட்டு அதற்கான ஆதாரங்கள் வீடுகள் தோறும் இருப்பது அகற்றப்பட்டது. ஆகவே, மாநகராட்சியில் உள்ள குடியிருப்புகளில் வசிக்கும் அனைவரும் ஒன்று சேர்ந்து கொசு உற்பத்தியாகும் ஆதாரங்களை கண்டறிந்து அகற்ற வேண்டும்.

டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுத்திட மூன்று முக்கிய பணிகளாக 1.புகை மருந்து அடிப்பதன் மூலம் முதிர்வடைந்த கொசுக்களை அழித்தல், 2.காய்ச்சல் வந்தவர்களுக்கு சிகிச்சை மூலம் குணமாக்குதல், 3.லார்வா நிலையில் உள்ள புழுக்களை அபேட் மருந்து ஊற்றி கொல்லுதல் மற்றும் டெங்கு கொசு உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து பொதுமக்கள் ஒத்துழைப்புடன் அகற்றுதல் மாநகராட்சி மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. டெங்கு அறிகுறிகள் தெரிய வந்தால் அப்பகுதியில் தனிக்கவனம் செலுத்தப்பட்டு நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. மாநகர பொதுமக்கள் சாதாரண சாய்ச்சல் இருந்தாலும் உரிய தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள மாநகராட்சி மற்றும் அரசு மருத்துவமணைகளில் தேவையான சிகிச்சைகள் இலவசமாக பெறலாம் என்று மாநகராட்சி ஆணையர் தெரிவித்தார்.

டெங்கு கொசு ஒழிப்பு பணி ஆய்வில் மாவட்ட நல அலுவலர் மண்வண்ணன், மாநகர நகர் நல அலுவலர்  கார்த்திகேயன் மற்றும் சுகாதார அலுவலர்கள் ,பணியாளர்கள் ஈடுபட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.