திருச்சி பேராசிரியருக்கு பிரதமர் மோடி பாராட்டு

0 17
Stalin trichy visit

திருச்சி, செப். 28 பிரதமர் தனது ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில், மணப்பாறையை சேர்ந்த தமிழ் பேராசிரியரின் முயற்சி குறித்து பாராட்டு தெரிவித்தார். அவர் கூறுகையில், ‘நாட்டின் கடந்த காலத்துடன் இணைவதற்காக, தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டம், மணப்பாறையில் ஒரு தனித்துவமான முயற்சி நடந்து வருகிறது. ஒரு கல்லூரியின் தமிழ் ஆய்வுத்துறையை சேர்ந்த ஏ.செல்வராஜ் என்ற பேராசிரியர் இந்த திட்டத்தை முன்னெடுத்து வருகிறார்’ என்று தெரிவித்தார். மேலும் அவர், ‘பேராசிரியர் செல்வராஜ், ஒரு விரிவுரையின் போது, ஒரு மாணவரிடம் இருந்து சில பழங்கால சிற்பங்களை பற்றி அறிந்துகொண்டார். அது குறித்த கலந்துரையாடலை தொடர்ந்து, அவர் ஒரு களப்பயணத்துக்கு திட்டமிட்டார். இந்த பயணத்தின் போது, பல்வேறு இடங்களில் உள்ள பல சிற்பங்களையும், பழங்கால கோவில்களையும் அவர் கண்டறிந்தார். கடந்த காலத்துடன் இணைவதற்கும், நாட்டின் பாரம்பரியத்தை இன்னும் சிறப்பாக புரிந்துகொள்வதற்கும் இது ஒரு அற்புதமான வழி’ என்றும் பாராட்டினார்.

Leave A Reply

Your email address will not be published.