பால்பண்ணை முதல் துவாக்குடி வரை அணுகுசாலை பணிகளை தொடங்க மாவட்ட ஆட்சியரிடம் த.வெ.க. இளைஞரணி கோரிக்கை

0 31
Stalin trichy visit

திருச்சி, அக்.1  தமிழக வெற்றிக் கழகத்தின் இளைஞரணி சார்பாக கடந்த ஆண்டு சமூக ஆர்வலர் கார்த்திக் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் பால்பண்ணை முதல் துவாக்குடி வரை போக்குவரத்து signalகள் அமைத்து விபத்துக்களை தடுக்க வேண்டும் என்ற கோரிக்கை மனு அளித்தார்.

அதன் தொடர்ச்சியாக BHEL, திருவரம்பூர், கைலாஷ் நகர், காட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து சிக்னல்கள் அமைக்கப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் பொது மக்களின் கோரிக்கையை ஏற்று போக்குவரத்து சிக்னல் அமைத்து தந்த திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரத்திக் தயாள் அவர்களுக்கு சமூக ஆர்வலர் கார்த்திக் மற்றும் தமிழக வெற்றிக்கழக இளைஞரணியினர் நேரில் சென்று நன்றி தெரிவித்தனர்,

மேலும் அந்த 16 கிலோமீட்டர் சாலையில் தமிழகத்திலேயே முதன்மையாக AI தொழில்நுட்பத்துடன் கூடிய signalகளாக தற்போது உள்ள சிக்னல்களை தரம் உயர்த்தி, மொத்த 16km நெடுஞ்சாலையையும், விபத்துக்கள் ஏற்படாத வகையில் பாதுகாப்பான நெடுஞ்சாலையாகவும், போக்குவரத்து நெரிசல் இன்றி மக்கள் பயணிக்கும் விதமாகவும் மேம்படுத்த வேண்டும் மேலும். அணுகு சாலை அமைத்திட தற்போது ஆரம்பகட்டமாக எந்தெந்த இடங்கள் சாத்தியப்படுமோ அந்த இடங்களில் பணிகளை துவங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மனு அளித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.