கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் ஓய்வூதியர்கள்ஆர்ப்பாட்டம்
திருச்சி, அக் 1 தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதிய சங்கம் சார்பில்
பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வேலிடேஷன் சட்டத்திருத்தத்தை
உடனடியாக ரத்து செய்ய வேண்டும். 7வது ஊதிய திருத்த ஆணையத்தின் பணி குறிப்புகள் திருத்தப்பட வேண்டும். குடும்ப ஓய்வூதியம் உயர்த்தப்பட்டு ஓய்வூதியங்களில் சமத்துவம் உறுதி செய்ய ப்பட வேண்டும். ரயில் மற்றும் விமான பயண டிக்கெட்டுகளில் மூத்த குடிமக்களுக்கு 50 சதவீத கட்டண சலுகை வழங்க வேண்டும் வலியுறுத்தி நாடு முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருச்சி மாவட்டம் சார்பில் திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் மதிவாணன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஜெயராமன் வரவேற்றால். இதில் மாநில பொருளாளர் செந்தமிழ் செல்வன்,
ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு மாவட்ட தலைவர் சிராஜுதீன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பால்பாண்டி , தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழக ஓய்வூதியர் நல அமைப்பு மாநில துணை பொதுச்செயலாளர் சண்முகம், தமிழ்நாடு தமிழ்நாடு மின்வாரிய
ஓய்வு பெற்றோர் நல அமைப்பு மாநில துணைத்தலைவர் பஷீர் மற்றும் பல்வேறு சங்கங்களை சேர்ந்த பிரதிநிதிகள் கோபால்சாமி, அஸ்லாம் பாஷா, மனோகரன், தங்க சுப்பிரமணியன், சின்னசாமி, சந்தனமூர்த்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டு கருத்துரை வழங்கினர். தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க முன்னாள் தலைவர் சுடலையாண்டி நிறைவுறையாற்றினார். மாவட்ட துணை தலைவர் குருநாதன் நன்றி கூறினார்.