இடைத்தேர்தலில் வாக்குக்கு பணம் : த.வெ.க.மீது அவதூறு குற்றச்சாட்டு – துரை வைகோ எம்.பி. பேட்டி

0 26
Stalin trichy visit

திருச்சி அக் 5 திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில், நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ  நேற்று  செய்தியாளர்களுக்கு   பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-

தேர்தல் பிரச்சாரத்தின்போது சிறுவர்களை ஈடுபடுத்துவதும், அவர்களை பேசச் சொல்வதும் ஏற்புடையதல்ல. தேர்தல் என்பது கண்ணியமான முறையில் கருத்துப் பரிமாற்றங்களை செய்வதாக இருக்க வேண்டும். சமீப காலமாக அரசியல் தலைவர்களே தனிமனிதத் தாக்குதல்கள், ஆபாசப் பேச்சுக்கள் மற்றும் உருவக்கேலி போன்ற செயல்களில் ஈடுபடுவது வேதனைக்குரியது. தொண்டர்களின் தவறுகளைத் தட்டிக் கேட்டு நெறிப்படுத்த வேண்டியது தலைவர்களின் கடமையாகும். ஆனால் இன்று அரசியல் தலைவர்களே இது போன்ற செயல்களில் ஈடுபடுவது வேதனையாக உள்ளது.

திமுக போன்ற 70 ஆண்டுகால பாரம்பரியமிக்க இயக்கத்தின் மூத்த தலைவர்களும், அடுத்த தலைமுறையினரும் தமிழ்நாட்டு அரசியலுக்கு நல்ல முன்னுதாரணமாக இருக்க வேண்டும். மாறாக, இதுபோன்று இரட்டை அர்த்தத்தில் பேசுவது, உருவகேலி செய்வது உள்ளிட்ட செயல்களுக்கு அவர்களே காரணமாக இருப்பது கண்டிக்கத்தக்கது. அரசாங்கங்களின் செயல்பாடுகளுக்கான தீர்ப்பு வழங்கும் களம் தேர்தல் மட்டுமே. தமிழ்நாட்டு மக்கள், குறிப்பாகப் பெண்கள் இதுபோன்ற அவதூறுகளுக்குத் தேர்தல் மூலம் உரிய பாடம் புகட்டுவார்கள்.

எந்த திட்டமாக இருந்தாலும் மக்களின் வரிப்பணத்தில் செயல்படுத்துவது தான். தலைவர்கள் திட்டத்தை அறிமுகப்படுத்துவார்கள். அது அவர்களின் வேலை. அதற்காக அவன் இவன் என ஒருமையில் பேசுவது சரியல்ல. திமுகவின் தலைவர் இப்படி பேசலாமா. இவரைப் போலத்தான் உதயநிதியும் செயல்பட்டு வருகிறார்.

தவெக மீது ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைப்பது அடிப்படையற்றது ஆகும். ஊழலற்ற அரசியலே அவர்களின் பலமாக உள்ளது. பணப் பலமின்றி தேர்தலை எதிர்கொள்ளும் அவர்கள் வாக்குக்கு பணம் கொடுக்க மாட்டார்கள். இரண்டு கட்சிகளும் கொள்ளை அடித்த பணத்தை கடந்த தேர்தலில் செலவு செய்து தோல்வி அடைந்தார்கள். தமிழக வெற்றி கழகம் வாக்குக்கு பணம் கொடுப்பதாக கூறுவது அவதூறு குற்றச்சாட்டு.

இந்த இடைத்தேர்தலில் திமுக மூன்றாவது இடத்திற்கு செல்லும், அல்லது டெபாசிட் இழந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. இரண்டாவது இடத்தில் அதிமுக வரலாம் என அங்கு உள்ள மக்கள் கூறியுள்ளனர். ரிசல்ட் வரும்போது தெரியும்.

தமிழக வெற்றி கழகம் இந்தியா கூட்டணியில் இணைந்துள்ளதை வரவேற்கிறேன். தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் இந்திய அரசியல் சாசனத்திற்கு எதிராக செயல்பட்டு வருகிறார். குறிப்பாக, மேற்கு வங்கம் உள்ளிட்ட பல மாநிலங்களில் இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் வாக்குரிமையைப் பாதிக்கும் வகையில் தன்னிச்சையாக முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் மற்றும் வாக்குரிமைப் பறிப்புக்கு எதிராக வரும் 6-ம் தேதி டெல்லியில் இந்தியா கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வோம்.

உச்சநீதிமன்றத் தீர்ப்பையும், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் வழிகாட்டுதல்களையும் மீறி கர்நாடக அரசு மேகதாது அணை விவகாரத்தில் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டின் உரிமையைப் பாதுகாக்க வேண்டிய ஒன்றிய பாஜக அரசு இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.