கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டம் : மின்வாரிய கேங்மேன் பணியாளர்கள் அறிவிப்பு

0 55
Stalin trichy visit

திருச்சி, அக். 5 தமிழ்நாடு மின்வாரிய கேங்மேன் மற்றும் பணியாளர்கள் சங்கத்தில் மாநில பொதுக்குழு செயற்குழு கூட்டம் திருச்சி உறையூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் செயல் தலைவர் பாலகிருஷ்ணன் வரவேற்று பேசினார் கூட்டத்திற்கு மாநில தலைவர் தமிழரசு தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் ராமன், பொருளாளர் பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் எம்பிளாயிஸ் யூனியன் பெடரேசன் பொதுச் செயலாளர் சேக்கிழார் சிறப்புரை ஆற்றினார்.

கூட்டத்தில் கேங்மேன் பணியாளர்களின் முக்கிய கோரிக்கையான 9,163 கேங் மேன் பணியாளர்களையும் கள உதவியாளர் பணியிடங்களுக்கு மாறுதல் செய்ய வேண்டும். கேங்மேன் பணியாளர்களின் உரிமைகள் மற்றும் பணி சலுகைகளை உறுதி செய்ய வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். பணியாளர் நலன் மற்றும் பாதுகாப்பு தொடர்பான கோரிக்கைகள் மற்றும் மின்வாரிய பணியாளர்களின் பணி, ஊதியம் பணியிட மாற்றம், பணி சலுகைகள் போன்ற பல்வேறு முக்கிய கோரிக்கைகளை இந்த மாத இறுதிக்குள் தமிழக அரசு நிறைவேற்றி தரவில்லை யென்றால் வருகிற நவம்பர் மாதத்தில் மின்வாரிய கேங்க் மேன் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபடுவோம் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

மின்சார வாரியம் தர்மத்திற்கு உள்ளது, மின் இடர்பாடுகளை சரி செய்வதற்கு கூட ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்த அரசு பதவி ஏற்றவுடன் தொலைநோக்கு பார்வையுடன் கோடை காலத்தில் மின் தடையை எப்படி சமாளிப்பது காற்றாலை மின் உற்பத்தி குறைந்தால் அதை எப்படி கையாள்வது என நீண்ட கால அடிப்படையில் மின்சார கொள்முதல் ஒப்பந்தம் செய்திருக்க வேண்டும். இந்த அரசு நீண்டகால, நடுத்தர கால, குறுகிய கால மின் கொள்முதல் செய்ய தவறி உள்ளது. அதற்குரிய ஒப்பந்தத்தை செய்து இருந்தால் மின்சாரத்தை 30 ரூபாய் கொடுத்து வாங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது. மின் வெட்டும், மின் தட்டுப்பாடும் ஏற்பட்டு இருக்காது அரசு அதை சரியாக செயல்படுத்தி இருக்க வேண்டும் என எம்பிளாயிஸ் யூனியன் பெடரேசன் பொதுச் செயலாளர் சேக்கிழார் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.